குடிநீர் தொட்டியில் மலம் ! தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் !
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள அமைச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தடயவியல் அதிகாரிகள் நேற்று இரவு மாதிரிகளைச் சேகரித்து சோதனைக்காக எடுத்துச் சென்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இன்று காலை முதல் கிராம மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 600 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் 3 வாகனங்கள் மூலம் வீடு வீடாகச்சென்று பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது.
குடிநீர்த்தொட்டி முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு, தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுவதற்கு 3 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை குடிநீர் வாகனங்கள் மூலமாக குடிநீர் விநியோகிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிகைகளை எடுத்து வருகிறது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.