நான் இருக்கேன் நீ ஏன்யா கவலைப்படுற ராமநாதபுரம் எம்எல்ஏ ஆறுதல்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மருதன் தோப்புபகுதியை சார்ந்தவர்கள் விக்னேஸ்வரன் சூர்யா இவரது தாய் சற்று மனநலம் பாதித்தவர் இவரது தகப்பனார் சிறுவயதிலேயே இவர்களை விட்டு விட்டு சென்று விட்டார்களாம் இந்நிலையில் அவர்களது தாய் மாமா ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் இவர்களை வளர்த்து வருகிறார் .
இந்நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீடு கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையில் இடிந்து விழுந்தது தங்குவதற்கு வசதியின்றி சிரமப்பட்டு வந்தனர் இந்நிலையில் நம்முடைய முகநூலில் நாம் வீடு இன்றி தவிக்கும் சிறுவர்கள் என சொல்லி இருந்தோம் நாம் செய்தி வெளியிட்ட அன்றே எம்எல்ஏ அவர்களின் அலுவலக உதவியாளர் ரஹீம் நம்மளை தொடர்பு கொண்டு அண்ணனுக்கு இந்த செய்தியை சொல்லிவிட்டேன் கண்டிப்பாக உதவுவார் என்று சொன்னார்.
அதேபோல் இன்று வருகை தந்து இடிந்த வீட்டை பார்வையிட்ட ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் நன்றாக படிக்க வேண்டும் எனவும் படிப்பதற்கு எவ்வளவு செலவானாலும் நான் உதவுகிறேன் என்றும் படிப்பு மட்டுமே உங்களின் வாழ்க்கை மாற்றம் என்று கூறினார்…
மேலும் அவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களையும் பண உதவியும் அளித்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செகானஸ் ஆபிதா நகர மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் அயலக அணி மாவட்ட தலைவர் முகமது அனிபா அயலக அனி மாவட்ட துணைத் தலைவர் இதிகார் ஹசன் ஒன்றிய கவுன்சிலர் கருத்த முத்து மற்றும் கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
— பாலாஜி.