வணிக பயன்பாட்டுக்கான கட்டிட வாடகைக்கும் 18% ஜி.எஸ்.டி. விரி விதிப்பு எதிரொலி ! மதுரையில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் !
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரையில் உள்ள அனைத்து வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நவம்பர்-29 அன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். மதுரை கீழமாசி வீதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட உணவுப் பொருள் மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருள் விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜி எஸ் டி கவுன்சில் தீர்மானத்தை முழுமையாக நீக்கம் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இன்று ஒரு நாள் முழு நேர கடையடைப்பு போராட்டம் நடத்தி வருவதால்,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மாசி வீதிகள் வெறிச்சோடியதுமத்திய அரசு மாநில அரசும் இணைந்து உருவாக்கிய ஜி.எஸ். டி. கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் படி வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது.
இதனால், வணிகர்கள், தயாரிப்பாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதால் இந்த தீர்மானத்தை கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகள் எதிர்க்காததால் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.