“எனக்கு கொரோனா தொற்று இல்லை”!… வதந்திகளை நம்ப வேண்டாம்… திருச்சி மாநகராட்சி ஆணையர்…
“எனக்கு கொரோனா தொற்று இல்லை”!… வதந்திகளை நம்ப வேண்டாம்… திருச்சி மாநகராட்சி ஆணையர்…
திருச்சியில் இன்று 21/05/2021 தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை புரிந்து கொரோனா நோய்தொற்றுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதி கொண்ட இடங்களை ஆய்வு செய்தார். அந்த வகையில் திருச்சியில் உள்ள அரசு மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் திருச்சி கலையரங்க திருமண மண்டபம், என்.ஐ.டி கல்வி நிறுவனம் ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதில் முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சி அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தவர்களை மட்டுமே முதல்வருடன் பணியில் உடனிருக்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானத்தின் மூலம் திருச்சியில் இருந்து சென்னை செல்ல திருச்சியில் திடீரென ஒரு பூகம்ப சத்தம் கேட்க ஆரம்பித்தது.. அது என்னவென்றால் திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனக்குகொரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவி வந்தது.
இதுதொடர்பாக அங்குசம் செய்திக்காக திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் பேசியபோது..
எனக்கு கொரோனா தொற்று உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவறுதலாக செய்திகளை பரப்பி வருகின்றனர் இந்நிலையில் முதல்வர் வருகையை முன்னிட்டு நான் எடுத்த என்னுடைய கொரோனா பரிசோதனை ரிசல்ட்னை வெளியிட்டுள்ளேன் அதில் எனக்கு தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் ஊடுருவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.
–ஜித்தன்