கீழக்கரை பகுதிகளில் கள்ள மது விற்பனை நடவடிக்கை எடுக்க கோரி பெரியார் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இராமநாதபுரம் மாவட்டம் இரண்டு மதுபான கடைகள் இருந்தன இந்த இரண்டு மதுபான கடைகளுமே புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் இருந்தன இதனால் இப்பகுதியில் பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். மது அருந்துபவர்கள் அவ்வழியாக செல்வரிடம் ஆபாசமாக பேசி அப்பகுதி மக்களை துன்புறுத்தவதால்  கடைகளை மூட வேண்டும் என பல்வேறு சமூக நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனை அடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அப்பகுதி மதுபான கடைகளையும் மூட உத்தரவிட்டார்.  இதனைத் தொடர்ந்து இரண்டு கடைகளும் மூடப்பட்டன ஆனால் கடைகள் மூடப்பட்டதன் விளைவாக தெற்கு தெருவில் மதுபானங்களை வைத்து கள்ளச் சந்தையில் விற்க ஆரம்பித்து விட்டனர். இதனை காவல்துறையும் கண்டு கொள்வதில்லை.

Sri Kumaran Mini HAll Trichy

பெரியார் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெரியார் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

இதனை கண்டித்து கீழக்கரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கீழக்கரை  பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளதனமாக மது பாட்டில் மற்றும் போதை பொருட்கள் விற்பனை தடை செய்ய கோரியும்  கள்ள சந்தையில் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பல்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் அதற்கு துனணபோகும் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பொறுப்பாளர்  ரவி தலைமை தாங்கினார். வீர குலத் தமிழர் படை மாநில பொறுப்பாளர்கள் மது கணேஷ், ராஜா, பிரபு ஆகியோர் முன்னிலை வைத்தனர் வீர குலத் தமிழர்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்.

பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், தமிழக மக்கள் முன்னணி மாநில பொறுப்பாளர் பாவல், ஆதித்தமிழர் கட்சியினுடைய தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், சமூக செயல்பாட்டாளர்  தமிழ்வாணன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம்,  பெரியார் திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர்  ரவிச்சந்திரன்.

Flats in Trichy for Sale

இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பேச்சாளர் சையது ஜமாலி, கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு முஹம்மது ஃபரூஸ், பொருளாளர் முஹம்மது சுபைர், துணை தலைவர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பெரியார் உணவாளர்கள் ஆர்ப்பாட்டம் வீர குலத் தமிழர் படையின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பிரியா, மகேஸ்வரி, பவித்ரா மற்றும் வீர குலத் தமிழர் படை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

மேலும் இது பற்றி வீரகுல தமிழர் படை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கூறியதாவது கள்ள மது விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.  இந்த மது விற்பனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காவல்துறையிடம் அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில் கோர்ட்டுக்கு சென்று அனுமதி வாங்கி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இப்படி ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு சென்று அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்த முடியுமா மேலும் காவல்துறையினர் கள்ள மது விற்பனையாளர்களுக்கு ஆதரவாளராகவே உள்ளனர்.  இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

 —  பாலாஜி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.