இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பேசும் முதல் தமிழ் சினிமா ‘ஹபீபி’ –ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நேசம் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹபீபி’. இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்  வெளியிடுகிறது. ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மீரா கதிரவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்..  சமீபத்தில் ‘ஹபீபி’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  சமீபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின்  வெளியிட்டார்.

ஈஷா என்கிற இளைஞன் இதில் அறிமுகமாக, இயக்குனர் கஸ்தூரிராஜா ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘ஜோ’ படத்தின் ஹீரோயின்  மாளவிகா மனோஜ் இதில் நாயகியாக நடித்திருக்கிறார். கவிஞர் யுகபாரதி பாடல்கள் எழுத, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

'ஹபீபி'படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறுகையில், “உலகம் முழுவதும் சுமார் 250 கோடி இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள்.  அவர்களின் சமூக பொருளாதார வாழ்வியல் சூழலை மையப்படுத்தி ஆயிரக்கணக்கான படங்கள் வருகின்றன.  இந்தியாவிலும் இஸ்லாமிய  மக்களின் வாழ்க்கையைப் பேசுகிற படங்கள் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் தொடர்ந்து வெளி வருகிறது.  அதற்கான ஒரு வியாபாரம் தளமும் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தமிழகச் சூழலில் அந்த இடம் நிரப்பப்படவில்லை என்றே கருதுகிறேன். ஆகவே தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முழுமையான இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையைப் பேசுகிற சினிமாவாகவும் அதேவேளை, எல்லோருக்குமான சினிமாவாகவும் இதை உருவாக்கியிருக்கிறேன்.

ஏற்கனவே  AI தொழில்நுட்பத்தில் மறைந்த மலேசியா வாசுதேவன், எஸ் பி பாலசுப்ரமணியம், சாகுல் அமீது , பம்பா பாக்கியா முதல் பலரின் குரலையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.  அந்த வரிசையில் ‘வல்லோனே வல்லோனே’ பாடலில் இசை முரசு நாகூர் E.M ஹனீஃபாவின் குரலை கொண்டு வந்திருக்கிறோம் என்பதை பாராட்டுக்களின் வழியாக அறிகிறோம்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உலக சினிமா என்கிற வார்த்தையை உச்சரிக்கும்போது ஈரான் என்கிற நாடு  நம் எல்லோருடைய நினைவுக்கும் வரும். உலகம் முழுவதும் அந்தத் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் உண்டு.. அப்படி ஒரு படைப்பாக ‘ஹபீபி’யை நம் ரசிகர்களுக்கு தர முயற்சித்து இருக்கிறோம்” என்கிறார்.

‘சித்திரம் பேசுதடி’,  தொடங்கி இப்போது ஜெயம் ரவியின் ‘ஜீனி’ வரை மோஸ்ட் வான்டட்  ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் மகேஷ் முத்துசுவாமி இப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.. தேசிய விருது பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்கிறார். மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ‘மாலிக்’ படத்திற்காக கேரள அரசின் சிறந்த கலை இயக்குனர் விருதை பெற்ற அப்புன்னி சாஜன் ‘ஹபீபி’ யின்  கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

மக்கள் தொடர்பு ; ஏ.ஜான்

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.