சத்யஜோதி + சீயான் விக்ரம் ’63’ அப்டேட்!
பாரம்பரியமிக்க சத்யஜோதி பிலிம்ஸுடன் கைகோர்த்து சீயான் விக்ரம் நடிக்கும் 63-ஆவது படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. சூப்பர்ஹிட்டான ‘இருமுகன்’ படத்திற்குப் பிறகு விக்ரமுடன் இணைந்துள்ளார் டைரக்டர் ஆனந்த் சங்கர். ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை கனகச்சிதமாக முடித்த பின்பு தான் ஷூட்டிங்கை தொடங்குவது சத்யஜோதி பிலிம்ஸ் கடைப்பிடிக்கும் தொழில்முறை நெறி. அதன்படி எல்லாமே பக்காவாக முடிந்த பின் இப்போது ஷூட்டிங்கை தீவிரப்படுத்தியுள்ளார் சத்யஜோதி தியாகராஜன்.
பெயர் வைக்காமல் ஷூட்டிங் தொடங்கியுள்ள இப்படத்தில் விக்ரமுடன் சம்யுக்தா ஹெக்டே, ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ரியா ஷிபு, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு : ஆர்டி. ராஜசேகர், இசை : சந்தோஷ் நாராயணன், தயாரிப்பு வடிவமைப்பு : ராஜீவன், வசனம் : ஷான் கருப்பசாமி, ஸ்டண்ட் : ‘ஸ்டண்ட்’ சில்வா, எடிட்டிங் : ரேமெண்ட் டெரிக், நடனம் : பிருந்தா, பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம்]
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.