போலீஸ் என கூறி ரூ.1 லட்சம் கையாடல் செய்த நபா் கைது!
காவல்துறையில் பணியாற்றுவதாக கூறி ஏமாற்றி பணத்தை பெற்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
திருச்சி மாநகர அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டீ கடையில் வேலை செய்யும் நபரிடம், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எதிரி ஜெத்ரோ @ ஷியாம் வயது 24, த.பெ.சாலமன் ராஜா என்பவர் தான் ஒரு போலீஸ்காரர் என அறிமுகம் செய்துக்கொண்டும் காவல்துறையினரால் ஏலத்தில் விடப்படும் இருசக்கர வாகனத்தை குறைந்த விலையில் ஏலம் எடுத்து தருவதாக கூறி பணம் .1,00,000/-பெற்றுக்கொண்டும், வாகனத்தை வாங்கி தராமலும், பணத்தை திரும்ப தராமலும் இருப்பதாக மோசடி செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

இவ்விசாரணையில் மேற்படி எதிரி ஜெத்ரோ @ ஷியாம் என்பவர் தன்னை ஒரு போலீஸ் என கூறி புகார்தாரரிடம் பணத்தை பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொண்டதன் பேரில் எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கபட்டது.
மேலும் திருச்சி மாநகரில் பொதுமக்கள் இதுபோன்று கூறுபவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும், தமிழக காவல்துறையில் பணியாற்றுவதாக கூறி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளபடும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., தெரிவித்துள்ளார்கள்.