அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கத்தி குத்தில் முடிந்த கல்லூரி மாணவர்கள் தகாத உறவு !

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

கத்தி குத்தில் முடிந்த கல்லூரி மாணவர்கள் தகாத உறவு !

குளித்தலையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பேருந்தில் சென்ற மாணவர் மற்றொரு மாணவரை திடீரென கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு !

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள புலியூர் செட்டிநாடு இன்ஜினியரிங் கல்லூரியில், திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி என்பவர் மகன் நித்தீஷ் குமார் வயது 21. இவர் அதே கல்லூரியில் இசிஇ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதி கௌத்தரசநல்லூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அண்ணாமலை வயது 21. இவர் அதே கல்லூரியில் எம் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இருவரும் கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். இருவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென நித்தீஷ்குமார் அண்ணாமலையுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

HARINI JEWELLERS TRICHY

இந்நிலையில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு சென்று வந்த இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதால், நித்தீஷ் குமார் அண்ணாமலையுடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அண்ணாமலை முசிறி பார்வதிபுரத்தில் உள்ள நித்தீஷ்குமார் வீட்டிற்கு சென்று பலமுறை சமாதானத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு நிதிஷ்குமார் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கல்லூரி என்பதால் வழக்கம்போல கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது சத்தியமங்கலம் அருகே பேருந்து வந்தபோது திடீரென அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நித்தீஷ் குமாரின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதனை பார்த்த சக மாணவ மாணவிகள் அலறி அடித்து சத்தம் போட்டனர். இதனை அடுத்து கல்லூரி பேருந்து நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் நித்தீஷ் குமாரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்ஜினியர் மாணவர் அண்ணாமலையை கைது செய்த குளித்தலை போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் இருவருக்கும் ஓரினச்சேர்க்கை உறவு இருந்து வந்துள்ளது. இதனை நித்தீஷ் குமார் தவிர்த்ததாகவும்  அதனால் தான் நித்தீஷ் குமார் கழுத்தை அறுத்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். இருவருக்கும் இருந்த கூடா நட்பு கேடாக முடிந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

– நௌஷாத்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.