கோவில்கள் நிறைந்த இடத்தில் எல்லாம் தி.மு.க.வே வெற்றி :

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கோவில்கள் நிறைந்த இடத்தில் எல்லாம் தி.மு.க.வே வெற்றி : கடவுளையும் மதத்தையும் பிரதானமாக வைத்து பிரச்சாரம் செய்தது பாஜக அதற்கு துணை நின்றது அதிமுக. தமிழகத்தில் முக்கிய கோவில் திருத்தலங்கள் உள்ள இடங்களில் எல்லாம் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பாஜவின் வெறுப்பு பிரச்சாரம் இங்கு தோல்வியில் முடிந்துள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனியாண்டி , அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை வென்றுள்ளார்.  சமயபுரம் கோயில் அமைந்துள்ள மண்ணச்சநல்லுார் தொகுதியில் , திமுக வேட்பாளர் கதிரவன் , அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியை தோற்கடித்துள்ளார்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

பழனி தொகுதியில் செந்தில்குமார் , திருச்செந்துார் தொகுதியில் அனிதா ராதா கிருஷ்ணன் , மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ள மதுரை மத்திய தொகுதியில் பழனிவேல் தியாகராஜன் என திமுக வேட்பாளர்களே வெற்றி வாகை சூடியுள்ளனர் . திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் அமைந்துள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை தோற்கடித்துள்ளார். 

தஞ்சை தொகுதியில் நீல மேகம் , தியாகராஜர் கோயில் அமைந்துள்ள திருவாரூரில் பூண்டி கலைவாணன் , கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ள மயிலாப்பூர் தொகுதியில் வேலு , ராமேஸ்வரம் கோயில் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் , திருவையாறு தொகுதி யில் துரை . சந்திரசேகரன் , கோயில் நகரமான கும்பகோணம் தொகுதியில் அன்பழகன் , திருத்தணி தொகுதியில் சந்திரன் , திருவண்ணாமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வெற்றி பெற்றுள்ளனர்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

திமுக தான் இனி மக்களுக்கான இயக்கம் என்பதை மக்கள் தங்கள் வாக்கால் சான்று கூறி இருக்கின்றார்கள்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.