மகனின் வெற்றிக்கு வாழ்த்து பெற மு.க.ஸ்டாலின் சந்தித்த திருச்சி எம்பி !

0

திருச்சி மக்களவைத் தொகுதி எம்பியும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான திரு நாவுக்கரசு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர் மத்தியில் திருநாவுக்கரசு கூறியது ; மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் பல்வேறு அனுபவம் கொண்டவர். எனவே மக்களுக்கான ஆட்சியை வழங்குவார்.

பின் தங்கியுள்ள தமிழகத்தை முன்னேற்றுவதற்கு செயல்படுவார், அதோடு சிறந்த முதல்வராக தமிழகத்தை வழிநடத்துவார் என்றும்.

அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள ராமச்சந்திரன்

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள தனது மகன் ராமச்சந்திரனை அழைத்து மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வந்திருப்பதாகக் கூறினார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.