திருச்சியில் சரக்குக்காக நடந்த கொலை சம்பவம்.. பின்னணி என்ன..

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

திருச்சியில் சரக்குக்காக நடந்த கொலை.. பின்னணி என்ன..

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவாசகன் (வயது -24), சுமைதூக்கும் வேலை செய்து வந்த இவர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து லாக்டவுனில் மொத்தமாக சரக்கு இறக்குமதி செய்து கல்கண்டார் கோட்டை பகுதியில் பிளாக்கில் விற்று வந்துள்ளார்.. இந்நிலையில் ஏற்கனவே அதே பகுதியில் பிளாக்கில் சரக்கு மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பலுக்கும் சரக்கு விற்பதில் போட்டி நிலவியுள்ளது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க


அதனால் ஒரு கட்டத்தில் அவ்விரு கும்பலும் ஏரியா பிரித்துகொண்டு கப்பம் கட்ட வேண்டிய இடத்தில் கட்டிக் கொண்டு வெகு ஜோராக விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட மணிவாசகன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அப்போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் வந்த ஆசாமி ஒருவர் தனது இடுப்பில் சொருகி இருந்த பட்டாக் கத்தியை எடுத்து தரையில் அடித்துக் கொண்டு இருந்துள்ளார். மாணிக்கவாசகத்தின் கேங்கை முறைத்துள்ளார்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கவாசகத்தின் நண்பர்கள் யாருடா நீ எங்க வந்து யாரை மொறைக்கிற என்று கேட்க அதற்கு என் நண்பனுக்கு எதிரா தொழில் பண்ணுறீங்களா அம்புட்டு பேரையும் சொரூகிடுவேன் என்று பிரச்சனை வாய் கலப்பில் ஆரம்பித்து கைகலப்பில் முடிந்துள்ளது.

3

பின்னர் இதுதொடர்பாக திருவெறும்பூர் போலீசார் தகவலறிந்து விசாரித்ததில் அந்த ஆசாமி தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்றும் மாணிக்கவாசகத்தின் கேங்கிற்கு எதிர் கேங்கினை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது பின்னர் போலீசார் கும்பலையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

 

4

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக 2 கேங்குகலும் எலியும் பூனையும் போல மேல் கல்கண்டார் கோட்டை பகுதியில் ஆயுதங்களுடன் திரிந்து வந்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக நேற்று 4/05/2021 மாலை குளித்துவிட்டு தனியாக வீடு திரும்பிய மாணிக்கவாசகத்தை பின் தொடர்ந்து வந்த அக்கும்பல் மாணிக்கவாசகத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியோடி உள்ளது.
மேலும் மாணிக்கவாசகத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் நேற்று மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் 3 போலீஸ் வேன்களில் அதிரடி படையினர் இறக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று 05/05/2021 சம்பந்தப்பட்ட கொலையாளிகள் இரண்டு பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக திருச்சி மாநகர் முக்கிய பகுதியான பொன்மலை காவல் நிலைய எல்லை பகுதியில் இளம் கேங்ஸ்டர் வலம் வந்து கொண்டிருப்பதாகவும் குற்ற செயல்கள் வருடா வருடம் பெருகிக்கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது ஏற்கனவே அப்பகுதியில் கறிக்கடைக்கு சென்ற வாலிபரை நடுரோட்டில் சரமாரியாக ஒரு கும்பல் வெட்டி சாய்த்தது அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு கேங்ஸ்டர் கொலை அரங்கேறியுள்ளது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜித்தன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.