திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி்த் தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவன் மு.சண்முகானந்தம் வரவேற்புரையாற்றினார்.
தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவா் ஞா. பெஸ்கி தலைமை வகித்தார். அவா் தம் தலைமையுரையில், தமிழ்ப் பேரவை மாணவர்களுக்கான தளம். இங்கு வழங்கப்படும் வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்றவர்களாக உருவாக அழைப்பு விடுத்தார்.
பணிமுறை இரண்டு துணைமுதல்வர் திருமதி. பாக்கிய செல்வ ரதி மற்றும் தமிழ்த்துறை பணி முறை -2 ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
வாசிப்பும் மறுவாசிப்பும் என்னும் மையப்பொருளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை உதவிப்பேராசிரியா் முனைவா் தெ.வெற்றிச்செல்வன் சிறப்புரையாற்றினார். அவர் அன்றாட வாழ்க்கை உரையாடலிலும், இலக்கியத்திலும் பயன்படுத்தப்படுகிற எண்ணற்ற சொற்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தி அதற்குரிய விளக்கங்களைத் தகுந்த சான்றுகளுடன் முன்வைத்து உரை நிகழ்த்தினார்.
முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவன் த.அரவிந்த் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
தொடக்க விழா நிகழ்வுகளைத் தமிழ்ப்பேரவைப் பொறுப்பாளா்கள் முனைவா் ரெ.நல்லமுத்து மற்றும் திரு.கு.அந்தோணி ராஜா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பேராசிரியா்கள், முனைவா் பட்ட ஆய்வாளா்கள், இளநிலை வகுப்புகள் மாணவா்கள் உள்பட 134 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிறைவில் இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி அ.தனப்பிரியா நன்றியுரையாற்றினார்.
— ஆதன்