2020-ல் நடந்த கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை. கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

0

கடந்த 2020-ல் நடந்த கொலை வழக்கு.. மூன்று பேருக்கு ஆயுள்… கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி, நச்சலூர் தாட்கோ காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் வடிவேல் இவர் கடந்த 9/7/2020 ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகளிடம் தவறாக பேசியதாக, அதே பகுதியைச் சேர்ந்த மேல நந்தவனக்காடு மாணிக்கம் மகன் வேலு (38),நச்சலூர் விஆர்ஓ காலனியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் சதீஷ்குமார் (35),நச்சலூர் தாட்கோ காலனியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் சங்கர் (24)ஆகிய மூன்று பேரும் வடிவேலை அடித்து உதைத்தனர். இதனால் படுகாயம் அடைந்த வடிவேல் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மறுநாள் இறந்தார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

இது சம்பந்தமாக வடிவேலின் தாய் செல்லம்மாள் குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் மூவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று மாலை நீதிபதி சண்முகசுந்தரம் வழங்கினார்.நீதிபதியின் தீர்ப்பில் குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதனைகட்ட தவறினால் மேலும் ஓராண்டு தண்டனையும் விதித்ததோடு,மற்றொரு பிரிவில் மூன்றாண்டு ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஆறு மாத கால சிறை தண்டனையும்,விதித்து தீர்ப்பளித்தார்.இதனை அடுத்து குற்றவாளிகள் 3-பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.