திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி இன்டெப் கலை விழா நிறைவு !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் துறை மாணவர்களுக்கிடையேயான இன்டெப் 2025 நுண் கலை விழா சிறப்பாக நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் திரைப்பட இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் சிறப்பு விருந்தினராகவும், கலக்கப்போவது யாரு பாலா கௌரவ விருந்தினராகவும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நுண்கலைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியோடு தொடங்கிய இரண்டாம் நாள் நிகழ்வில் சின்னத்திரைக் கலைஞர்களும், முன்னாள் மாணவர்களுமான ராக்போர்ட் ராய், டாங்கிரி டேவிட், மிமிக்கிரி விஜய், இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, கலை இயக்குநர் பிரின்ஸ் லியோ அலெக்ஸ், திருச்சி சரவணக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்பு நிகழ்வுகளை அரங்கேற்றினர். தொடர்ந்து நுண்கலைக் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. வரவேற்புரையாற்றினார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. இணை முதல்வர் முனைவர் த.குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை கௌரவப்படுத்தினர். ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் டாம்னிக், அலுவலகர்கள் சங்கத் தலைவர் சேவியர் இளங்கோ ஜோதி மாணவர் பேரவைத் ச.ஆசிக் டோனி மற்றும் மாணவர் பேரவை குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
கலைப்போட்டிகளில் வென்ற மாணவர்களின் புள்ளிகளின் அடிப்படையில் பணிமுறை ஒன்றில் வேதியியல் துறையும், பணிமுறையில் இரண்டில் உயிர் வேதியியல், உயிர் தொழில்நுட்பவியல் துறையும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றது. வேதியியல் துறை ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது. வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர். மாணவர்கள் ஆசிக் டோனி மற்றும் உமா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். நிறைவில் நுண்கலைக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் விமல் ஜெரால்டு நன்றியுரையாற்றினார். நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நுண்கலைக்குழு இயக்குநர் அருள்முனைவர் அருளானந்தம், சே.ச. ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் விமல் ஜெரால்டு, முனைவர் கா.ஜான்கென்னடி உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர் பேரவையினர் சிறப்பாக செய்திருந்தனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.