அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஸ்ரீநிவாச கல்யாண வைபவம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

திருச்சியில் அடகு நகையை விற்க

மதிப்பிற்கும். மரியாதைக்குரிய என்றும் இறைப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீநிவாச கல்யாண கமிட்டியின் தலைவர். சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் C வள்ளிய, விசாலாட்சி சொக்கு. வருண் சொக்கு அவர்களையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 26-ஆம் நாள் (10/01/2026) சனிக்கிழமை மாலை 4/00 மணி முதல் இரவு 9/00 மணி வரை சேலம். ஜங்ஷன் மெயின்ரோடு. சோனா கல்வி நிறுவனங்களின் திறந்தவெளி மைதானத்தில் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீநிவாச கல்யாணம் ஐந்தாவது முறையாக சிறப்பாக நடைபெற உள்ளது. இதன் முதல் நிகழ்ச்சியாக. 14/12/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் ஸ்ரீநிவாச கல்யாணத்தின் முக்கிய நிகழ்வான முகூர்த்தக் கால் நடுதல் நிகழ்ச்சி சோனா திறந்தவெளி மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இரண்டாவது நிகழ்ச்சியாக. வருகின்ற ஜனவரி 2. 2026 வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீநிவாச கல்யாணத்திற்கு மஞ்சள் இடித்தல் நிகழ்ச்சி ஸ்ரீ வள்ளியப்பா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

மூன்றாவது நிகழ்ச்சியாக. 09/01/2026. வெள்ளிக்கிழமை மாலை 7/00 மணிக்கு ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் சோனா கல்லூரி வளாகத்திலுள்ள  ஸ்ரீ வள்ளியப்பா அரங்கத்தில் எழுந்தருளவுள்ளார். கல்லூரியின் தலைவர். நிர்வாகத்தினர். ஸ்ரீநிவாச கல்யாண கமிட்டி உறுப்பினர்கள். ஸ்வாமிக்கு பூர்ண கும்ப மரியாதை அளித்து உரிய ஆச்சாரங்களுடன் ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்பு இரவு 10 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நான்காவது நிகழ்ச்சியாக. 10 ஜனவரி 2026. சனிக்கிழமையன்று காலை 10:45 மணி முதல் சேலம் ஜங்ஷன் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இருந்து சீர்வரிசைகளுடன் திருவீதி உலா நடைபெற்று, காலை 11:45 மணிக்கு ஸ்ரீ வள்ளியப்பா அரங்கத்தில் சீர்வரிசைகள் உற்சவ மூர்த்தி முன் சமர்ப்பிக்கும் நிகழ்வு நடைபெறும். பிற்பகல் 12:30 மணிக்கு சோனாரியா குழுவினரின் பக்தி பஜனை இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஐந்தாவது நிகழ்ச்சியாக, 10 ஜனவரி 2026 மாலை 3.30 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீ வள்ளியப்பா அரங்கத்திலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு கல்யாணம் நடைபெறவுள்ள சோனா திறந்தவெளி மைதானத்திற்கு வந்தடையும். மாலை 6:00 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை  திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்களால் அனைத்து திருமண சடங்குகளுடன் ஸ்ரீநிவாச கல்யாண வைபவம் பொதுமக்கள் முன்னிலையில் சோனா திறந்தவெளி மைதானத்தில் பக்தி பரவசத்துடன் நடைபெறவுள்ளது.

2026 ஜனவரி 10 ஆம் தேதி சோனா மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஸ்ரீநிவாச கல்யாண நிகழ்ச்சி சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற உறுதுணையாக இருக்கின்ற உப தலைவர்கள் Dr.K.அர்த்தநாரி,C.V..அப்புசாமி, V.ரவிச்சந்திரன்,  செயலாளர் முனைவர்  V.கார்த்திகேயன், பொருளாளர் L.சுப்ரமணியன்,  முருகாலயா  பழனிசாமி  ஸ்ரீநிவாச கல்யாண கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சோனா கல்லூரிகளின் அனைத்து  முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் வழங்கும் ஒருங்கிணைந்த முயற்சி, திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளுக்காக நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் உயர்திரு C.வள்ளியப்பா  முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ள ஸ்ரீநிவாச கல்யாண வைபவத்திற்கு பொதுமக்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஊடக நண்பர்கள் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரளாக ஸ்ரீநிவாச கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு  திருமலையானின்  திருவருளால் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ  ஸ்ரீநிவாச கல்யாண கமிட்டி உறுப்பினர்கள் சார்பாக செயலாளர் முனைவர்  V.கார்த்திகேயன்  அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.