கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பணி முறைகேடுகள் கண்டித்து ஆர்ப்பாட்டம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

புதுக்கோட்டை மாவட்டம், கொன்னையூர்: கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பணி செய்யக்கூடிய செயல் அலுவலர் ஜெயா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  நிர்வாகத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் (SFI) தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வைரவளவன் தலைமை வகித்தார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கா. குமார், ராஜேந்திரன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை திருமயம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் முத்து வளவன், திமுக கிளைச் செயலாளர்  ஷேக் முகம்மது, சுடர்வளவன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஆர்ப்பாட்டம் !கோவில் திருக்குளத்தை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும், கோவில் நிர்வாகம் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் மீது துறை ரீதியாக உரிய விசாரணை நடத்த வேண்டும், குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மேலும், கோவில் கோபுரங்கள் மற்றும் கட்டிடங்களில் வளர்ந்துள்ள அரசமரம், ஆலமரம் உள்ளிட்ட மரங்களை அகற்ற வேண்டும் என்றும், பக்தர்களுக்கான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில்  கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கொன்னையூர் கொப்பனாபட்டி ஊர் பொதுமக்கள் தொழிலாளர்கள் அர்ச்சனைகளை வியாபாரிகள்   என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நன்றி உரையாக சிஐடியு நிர்வாகி லெ.சிவசங்கர் அவர்கள் போராட்டத்தை நிறைவு செய்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.