பிஷப் ஹீபர் கல்லூரியில் – (AI) தொழில் வழிகாட்டல் பயிலரங்கம்
பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி, வணிகவியல் துறையின் B.Com Business Process Management & Business Analytics சார்பில் “Resume to Dream Job: An AI-Driven Career Workshop” என்ற தலைப்பில் ஒருநாள் தொழில் வழிகாட்டல் பயிலரங்கம் 08.09.2026 அன்று நடைபெற்றது.
இப்பயிலரங்கில் St. Joseph’s College, Trichy, Department of Computer Science-ஐச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் Dr. A. Vimal Jerald சிறப்பு வளநபராகக் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறந்த Resume தயாரித்தல், வேலைவாய்ப்புக்கான தயாரிப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான நவீன அணுகுமுறைகள் குறித்து பயிற்சி வழங்கினார்.
இந்நிகழ்வில் 110 உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்விற்கு வணிகவியல் துறைத் தலைவர் Dr. D. Fennala Agnes Iylin கன்வீனராகவும், B.Com BPM & Business Analytics ஒருங்கிணைப்பாளர் Dr. K. Muthulakshmi ஏற்பாட்டாளராகவும் செயல்பட்டனர். Dr. S. Deepa, Dr. G. Karthik, Prof. S. Evangeline Green மற்றும் Dr. T. Thilagavathy ஆகியோர் இணை ஏற்பாட்டாளர்களாகப் பணியாற்றினர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.