இதிலுமா அரசியல்?
தினமலரின் 75-வது ஆண்டு விழாவில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு, கௌரவித்துள்ளது, தபால் துறை. பாராட்டுக்குரியதுதான்.
சுதந்திரத்திற்கு முன்பே துவங்கி எழுச்சியூட்டிய சுதேசமித்திரன். பாமரனை படிக்கவைத்து பெருமை சேர்த்த தினத்தந்தி. உலக அரசியலை ஒரு கட்டுரையில் உள்ளடக்கி தமிழனுக்கு உலக இந்திய அரசியலை, புரியவைத்த தினமணி. தற்போது இல்லை என்றாலும், தமிழை உயிர் மூச்சாக கொண்டு வீறு நடை போட்ட தமிழ்நாடு உள்ளிட்ட நாளிதழ்கள் 75 ஆண்டுகால வரலாற்றை கொண்டவை.
6.9.51 தலையங்கத்தில் தினமலர் குறிப்பிட்ட வாறு கட்சி சாரா வகையில் இருந்தது ஓரளவு உண்மை. ஆனால், இன்று அப்படி இல்லை. ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் ‘அறிஞர் அண்ணாவை’ அண்ணாதுரை என்று இன்றும் எழுதுகிறது தினமலர். தந்தை பெரியாரிடம் கொள்கையின் முரன்பாடுகள் இருந்தாலும் அண்ணல் காந்தி, காமராஜர், ராஜாஜி ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். இன்றுவரை பெரியாரை, ஒரு பகுத்தறிவாளனை, மதித்ததில்லை. அவர் பெயர் இடம்பெறும் கட்டுரைகள் எதுவும் வெளியிட்டதில்லை.
பாரம்பரிய பெருமை கொண்ட, மற்ற நாழிதழ்களுக்கான அங்கீகாரம் எங்கே? இதிலுமா அரசியல்? அஞ்சல் தலை வெளியிடும் அளவிற்கு செய்த சாதனைதான் என்ன? ஆனால், ஒரு உண்மையை தினமல்ர் மறக்கவோ, மறைக்கவோ முடியாது. கலைஞர் அவர்களால் 10ஆண்டு காலம் அரசாங்கத்தின் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டிருந்தன.

புரட்சி தலைவர் எம்.ஜிஆர். என்னும் ஒரு மாமனிதரின் அரசியல் துவக்கத்தில் இருந்து இன்று வரை தினமலருக்கு ஒரு சுக்கிர திசைதான். கிராமிய பானியில் சொன்னால் தினமலர் நற்புகழுக்கும் வளர்ச்சிக்கும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் மூல காரணம் என்பதை நாடறியும். தினமலரை பெற்றடுத்தவரே அவர்தான். ஆனால், நடைபெற்ற விழாவில் புரட்சித்தலைவர் பெயரைக்கூட எவரும் குறிப்பிடாதது மாபெரும் துரோகச் செயல்.
இன்றய தினமலர் மாநில அரசுகளை விமர்சிக்கும் அளவு, மைய அரசை கண்டு கொள்வதில்லை. ஆதிக்க சக்தியின் அரவணைப்பில் தொடர்ந்து காலம் கடத்தும் புத்திசாலிதனம் படு ஜோர்.
எழுத்துக் கனைகள் கண்டு அரசாங்கம் அஞ்ச வேண்டும். மாற்றங்கள் வரவேண்டும். ”ஆயிரம் ஈட்டி முனைகளின் கூர்மைகளை விட ஒரு பேனா முனைக்கு நான் அடி பனிவேன்” என்றான் நெப்போலியன்.
உண்மையை உரைக்கவேண்டும். அரசு ஊழியர்களை கொச்சைப் படுத்துவது, சம்பள உயர்வு, பஞ்சப்படி கொடுப்பது போன்றவற்றை தின மலர் கண்டித்து எழுதி வருவது வருந்ததக்கது.
காலத்தின் சூழ் நிலைகள் வேகமாக அசுரம் கொண்டு எழுகின்றன. உணர்வுகள் ஒன்று சேர்ந்தால் எந்த சக்தியும் தாங்காது. ‘அனைவரும் சமம்’ என்ற கொள்கையில் இருந்து அடி பிறழாது தினமலர் செயல்பாடு இருக்கட்டும்.
— பி. அருணாச்சலம், மதுரை.






Comments are closed, but trackbacks and pingbacks are open.