சட்ட சிக்கலில் கலைமகள் சபா சொத்துக்கள் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழகம் முழுவதும் 33 மாவட்டங்களில் கலைமகள் சபா-வுக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலான சொத்துக்கள் தற்போது ஆக்கிரமிப்பில் இருப்பதாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கலைமகள் சபா உறுப்பினர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான ஒருநபர் ஆணையம் மற்றும் கலைமகள் சபாவின் சிறப்பு அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். ஆகியோர் இணைந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கள ஆய்வை நடத்தி வருகிறார்கள். மாவட்டம் தோறும் கலைமகள் சபா சொத்துக்களை பராமரிப்பதற்கென்று பொறுப்பு அலுவலர்களை நியமித்து வருகிறார்கள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைமகள் சபா சொத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிலர் மேற்கொண்ட முயற்சியை அங்குசம் செய்தியாக்கியிருந்தது. கலைமகள் சபா நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு, அந்த சொத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது.

இத்தகைய பின்புலத்தில்தான், ஒவ்வொரு மாவட்டங்களையும் சேர்ந்த கலைமகள் சபா உறுப்பினர்கள் தங்களது கூட்டு பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக கோயமுத்தூரை சேர்ந்த கலைமகள் சபா உறுப்பினர் கோ.இளங்கோ என்பவர் கோவை – பல்லடம் தாலுகாவில் அமைந்துள்ள கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பான தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக பெற்றிருக்கிறார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கோ.இளங்கோ
கோ.இளங்கோ

பொது தகவல் அலுவலரும் தலைமையிடத்து துணை வட்டாட்சியருமான மு.ரஞ்சித்குமார் வழங்கியுள்ள தகவலின்படி, பல்லடம் வட்டத்தில், 32 ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 198.27 ஏக்கர் அளவுக்கு நிலம் கலைமகள் சபா பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. மாதப்பூர் வருவாய் கிராமத்தில் புல எண்கள் : 364/1, 364/2, 355, 356/2, 357/2, 357/3, 353/1 ஆகிய சர்வே எண்களை கொண்ட நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. மேற்கண்ட நிலங்களின் பட்டா ஆக்கிரமிப்பாளர்களின் பெயருக்கு மாறியிருப்பதோடு, இவற்றுள் சில இடங்களில் சோளம், மக்காச்சோளம், வெங்காயம், இளந்தென்னை சாகுபடியை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

மாதப்பூர் வருவாய் கிராமத்தில், புல எண்கள்: 348/2, 353/2, 349, 350/2 மற்றும் பொங்கலூர் வருவாய் கிராமத்தில் புல எண்கள்: 295/1, 296, 297, 295/2, 295/3, 364/1 ஆகிய நிலங்களில் நேரடி ஆக்கிரமிப்பு ஏதுமில்லை – எவரும் விவசாயப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற போதிலும் இவையனைத்திலும் மற்றவர்கள் பெயர்களும் சேர்ந்திருக்கிறது. அதாவது, அனைத்தும் கூட்டுப்பட்டா உரிமையில் இடம்பெற்றிருக்கிறது. கலைமகள் சபா பெயரும் அதில் இடம்பெற்றிருக்கிறது. அதே பட்டாவில் மற்றவர்கள் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

கலைமகள் சபாகுறிப்பாக, பொங்கலூர் வருவாய் கிராமத்தில் புல எண்: 364/1 இல் 14.3 ஏக்கர் அளவுள்ள இடத்திற்கு ராமசாமிநாயுடு மகன் ராஜேந்திரன் என்பவர் பெயரும் கலைமகள் சபாவின் பெயரும் கூட்டாக இடம்பெற்றிருக்கிறது. ”மேற்படி ராஜேந்திரன் என்பவர் மேற்படி நிலம் தனக்கு பாத்தியப்பட்டது என்பதாக, பல்லடம் சார்பதிவாளர் அலுவலக ஆவண எண்: 1973/1936 மற்றும் பாக சாசன ஆவண் எண்: 2678/1992 மற்றும் கிரைய ஆவண எண்: 3091/1999 ஆகியவற்றை சமர்ப்பித்திருக்கிறார். ஆனால், கலைமகள் சபாவிற்கு பாத்தியப்பட்டதாக கூறப்படும் ஆவண எண்: 128/1993 –ஐ பரிசீலனை செய்ததில் மேற்படி ஆவணமானது பல்லடம் வட்டம், பொங்கலூர் கிராமத்திற்குட்பட்டதல்ல” என்பதாக பதிலளித்திருக்கிறார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மு.ரஞ்சித்குமார்.

இத்தகைய தரவுகள், கலைமகள் சபாவின் சொத்துக்கள் எதிர்கொண்டிருக்கும் உரிமையியல் சட்ட சிக்கல்களை புலப்படுத்துகின்றன. தீர்வு பணமாக வேண்டுமா? நிலமாக வேண்டுமா? என்ற வாத பிரதிவாதங்களைவிட, முதலில் கலைமகள் சபா சொத்து தொடர்பான உரிமையியல் சிக்கல்களை தீர்த்து சொத்துக்களை கையகப்படுத்துவதுதான் முதல்கடமையாக இருக்க முடியும் என்ற யதார்த்தத்தையும் முன்வைத்திருக்கிறது.

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.