ஊருக்குத்தான் உபதேசமா?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

உலக பிரதிசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு, தமிழகத்திலிருந்து மட்டுமல்ல; நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும்கூட ஆன்மீக சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எப்போதும் பரபரப்பாகவே இயங்கிவரும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான பழைமையான கட்டிடங்களால், பக்தர்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து வரலாம் என்ற நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி அமைந்துள்ள பழமையான 36 கட்டிடங்களை 7 நாட்களுக்குள் இடிக்கச் சொல்லி அதிரடி உத்தரவு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, மதுரை மாநகர் முழுவதுமுள்ள 236 கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து வருவதாகவும்; அவசியமான நேர்வுகளில் அவையும் இடிக்கப்படலாம் என்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதெல்லாம் சரிதான். தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்கச்சொல்லும் அதிகாரிகள், அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை என்றைக்காவது ஏறெடுத்துப் பார்த்திருக்கிறார்களா? அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் பல, இவர்கள் சொல்லும் வரையறைகளை அப்பட்டமாக மீறி, அபாயகரமான நிலையில்தான் இன்றளவும் இருந்து வருகின்றன. குறிப்பாக, மதுரை சந்தைப்பேட்டை கழிவுநீரேற்று மையத்தில் அமைந்துள்ள கட்டிடம் எப்போதும் இடிந்து விழும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது. ஊருக்குத்தான் உபதேசமா?  பழமையான கட்டிடங்களின் கணக்கெடுப்பும் கள ஆய்வும், அரசுக்கு சொந்தமான கட்டிடங்களிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.