திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026: திருச்சி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 (Solid Waste Management Rules. 2026)ன் படி பின்வரும் அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்யும் நிறுவனம் அல்லது அமைப்பு “மொத்தக் கழிவு உருவாக்குபவர் “ (Bulk Waste Generator- BWG)  என வகைப்படுத்தப்படும் மொத்தம் 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு (Built up area) கொண்ட கட்டிடம் அல்லது நாள் ஒன்றுக்கு 40,000 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீர் நுகர்வு கொண்ட நிறுவனம் அல்லது நாள் ஒன்றுக்கு 100 கிலோகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவு உருவாக்கும் நிறுவனம் அல்லது அமைப்பு.

மேற்கண்ட வரையறையின்படி நிறுவன அமைப்புகள் வணிக நிறுவனங்கள் குடியிருப்பு நலச் சங்கங்கள் (R W As). ஹோட்டல்கள், விடுதிகள் , மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப (IT) பூங்காக்கள், திருமண மண்டபங்கள், அனைத்தும் மொத்தக் கழிவு உருவாக்குபவர்கள் (BWGs) எனும் பிரிவின் கீழ் அடங்கும். கட்டாயப் பதிவு அனைத்து மொத்தக் கழிவு உருவாக்குபவர்களும் (BWGs) மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB). அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

பதிவுக்கான கால அவகாசம்:  தகுதியான அனைத்து மொத்தக் கழிவு உருவாக்குபவர்களும்  (BWGs) இந்தச் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் தங்களது கட்டாயப் பதிவை முடிக்க வேண்டும். விதிமீறல் தொடர்பான நடவடிக்கை:  குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவை முடிக்கத் தவறும் மொத்தக் கழிவு உருவாக்குபவர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மீறலுக்கான தண்டனை :  விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுவது மேற்கூறிய விதிகளின்படி கடுமைபான அமலாக்க நடவடிக்கைகளுக்கும் அபராதங்களுக்கும் வழிவகுக்கும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கழிவு மேலாண்மை நடைமுறைகள்:  மொத்தக் கழிவு உருவாக்குபவர்கள் (BWGs) தங்களது சொந்தச் செலவில் தேவையான 4 வண்ணக் குறியீடுகள் கொண்ட குப்பைத் தொட்டிகளை வாங்க வேண்டும், மேலும், கழிவுகளை அவை உருவாகும் இடத்திலேயே (மூலத்திலேயே) ஈரக் கழிவு, உலர் கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்புக் கழிவு எனத் தனித்தனியாகப் பிரிப்பதை உறுதி செய்ய வேண்டும். பிரிக்கப்பட்ட  கழிவுகள் தங்களது வளாகத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி  அல்லது அதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட முகமையிடம்  (Agency) ஒப்படைக்கப்பட வேண்டும். விரிவாக்கப்பட்ட மொத்தக் கழிவு உருவாககுபவர் பொறுப்பு (EBWGR): ஒரு மொத்தக் கழிவு உருவாக்குபவரால் தங்களது வளாகத்திற்குள் மட்கும் (ஈரக்) கழிவைச் செயலாக்க இயலாத பட்சத்தில் அவர்கள் திடக்கழிவு மேலாண்மை விதிகள் ,2026 ன் விதி 10-ன் கீழ் உள்ள “விரிவாக்கப்பட்ட மொத்தக் கழிவு உருவாக்குபவர் பொறுப்பு” (EBWGR) தொடர்பான விதிகளுக்கு இணங்க வேண்டும்.

மேலும், பொருந்தக்கூடிய இடங்களில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி  மூலம் நிர்ணயிக்கப்பட்ட EBWGR சான்றிதழ் அல்லது இணக்கச் சான்றைப் (Proof of Compliance) பெற வேண்டும். ஆய்வு மற்றும் சரிபார்ப்பு மொத்தக் கழிவு உருவாக்குபவர்கள் (BWGs)  தங்களது வளாகம், பதிவேடுகள் மற்றும் கழிவு மேலாண்மை வசதிகளை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அல்லது திடக்கழிவு மேலாண்மை விதிகள். 2026ன் கீழ் அதிகாரம் பெற்ற வேறு எந்தவொரு தகுதியுள்ள அதிகாரியும் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் ஆய்வு அல்லது சரிபார்ப்பின் போது தேவைப்படும் தகவல்கள் பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை வழங்க வேண்டும்.

பதிவு செய்யும் இணையதளம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB): திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் பெயர் (இணைப்பு:https://swm.cpcb.gov.in/register) குறிப்பு: மொத்தக் கழிவு உருவாக்குபவர்களின் (BWGs)  ஆன்லைன் பதிவை எளிதாக்கவும், பதிவு இணையதளத்தில் தேவையான தகவல்களைப் பதிவேற்றம் செய்ய உதவவும், மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் “பதிவு செய்வதற்கான உதவி” (Registration Assistance) வழங்கப்படுகிறது. எனவே, மொத்த கழிவுகளை உருவாக்கும் அனைத்து நிறுவனங்கள், அமைப்புகளும் தங்களின் மேலான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாநகராட்சி ஆணையர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.