எப்போதுதான் விடிவு ? TRB வழக்கின் லேட்டஸ்ட் அப்டேட் !
தமிழக அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,078 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதிப்பீட்டு முறையை வெளிப்படையாக அறிவித்து, பாட நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரை உயர் நீதிமன்றக் கிளையிலும் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இவ்விரு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்த 53 பேருக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, மற்ற பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளைத் தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஒருபுறம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் வழக்கு விசாரணையும் தொடர்ந்து தள்ளிக்கொண்டே போவது தேர்வை எதிர்கொண்ட மாணவர்களிடையே அயற்சியை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், அடுத்தடுத்து தாக்கலாகும் புதிய வழக்குகளும் தலைவலியை ஏற்படுத்தும் விவகாரமாக மாறியிருக்கிறது.
முழுமையான காணொளியை காண
எப்போதுதான் விடிவு ? TRB வழக்கின் லேட்டஸ்ட் அப்டேட் !
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.