வன்மத்தை தவிர்ப்போம்! சகோதரத்துவத்தை வளர்ப்போம்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் சி. மிருதுளா அவர்கள் மீது வன்மம் வேண்டாம்!

தமிழ்ச் சமூகத்தை சாதியாகப் பிரித்து வைத்து தமிழ்ப் பெண்கள் தங்களுக்கான இணையரை தாங்களே தேடிக்கொள்ளும் உரிமையை பறித்து , இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு 21ன் படி தங்களின் உரிமைகளை அனுபவிக்கவிடாமல் பெண்களைத் தடுக்கும் தமிழ்ச் சமூகம் தோழர் சி. மிருதுளா போன்றவர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்!

இந்த வார அங்குசம் வார இதழில்…

செய்தியாளர் கேட்ட கேள்விக்கு விடை தரும் போது, பெண்ணியப் பார்வையில் சமூக, அரசியல் சிக்கலைப் புரிந்து கொண்டு அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் தனது கருத்தை தோழர் சி. மிருதுளா வெளிப்படுத்தியுள்ளார்.

தனிப்பட்ட வகையில் அவர் யாரையும் அல்லது எந்த இயக்கத்தையும் விமர்சனம் செய்ததாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

சி.மிருதுளா
சி.மிருதுளா

உலகத்தில் முதன்முறையாக தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி ருஷ்யாவில்  அமைந்த தினமான நவம்பர் 7 உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தால் புரட்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

2012ம் ஆண்டு அந்த நாளை தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தில் மூன்று குடியிருப்பு பகுதிகள் தீக்கிரையாக்கப்பட்டது மனித குலத்தை உலுக்கியது.

அன்றைய தினம், அந்த வன்முறையை கண்டித்தது யார், கண்டிக்கத் தவறியது யார், வன்முறைக்கு ஆதரவு நிலை எடுத்தது யார், எந்தெந்த கட்சி எத்தகைய நிலைபாடு எடுத்தது என்பதை அனைவரும் அறிவர்.

பாதிக்கப்பட்ட கிராமத்தில் வசித்த குழந்தைகள், காவல் துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட கொடுமையை அனைவரும் அறிவர்.

அந்த மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாகி இருந்ததையும், அவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனை தேவை என்பதையும் அந்த மாவட்டத்தை சார்ந்த பத்திரிகையாளர்கள் தங்களின் கவலையாகவே வெளிப்படுத்தினர்.

பாதிப்பிற்குள்ளான மக்கள் பக்கம் யார் நின்றார்கள், யார் வன்முறையார்களின் வன்செயல்களுக்கு தூண்டுதலாக நடந்து கொண்டார்கள், அவர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினரை பிரித்து, நீதிமன்றம் செல்லும் போது பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் போது இல்லாமல் போனது யாரால், அந்த வழக்கில் யார் வழக்குரைஞர், அந்த வழக்குரைஞர் எந்த கட்சி என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே.

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு
பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு

நடந்த கொடூரத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. ஒரு பெண், ஒரு ஆணை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக மூன்று ஊரை எரித்து, அதை அரசியல் ஆதாயமாக்கி, மாநிலம் முழுக்க சாதி ரீதியாக மக்களை அணிதிரட்ட முயற்சி செய்தது யார் என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழ்ச் சமூகத்தின் அவமானமாக பதிந்துள்ள இந்த நிகழ்வை மறு ஆய்வு செய்ய யாரும் இங்கு விரும்பவில்லை. தீயவர்கள் தூண்டுதலுக்கு இரையாகமல் தொழிலாளர் வர்க்கமாக உழைக்கின்ற மக்கள் அணிதிரள வேண்டும், சாதியாக மக்களை கூறுபோட அனுமதிக்கக் கூடாது என்பதே அனைவரின் விருப்பம்.

பள்ளி மாணவராக தான் இருந்த போது, ஆழமாக தனது மனதில் பதிந்துப் போன ஒரு சம்பவம், தற்போது இயல்பான உரையாடலில் வெளிப்பட்டுள்ளது என்ற அடிப்படையில்தான் தோழர் சி. மிருதுளாவின் பேச்சை புரிந்து கொள்ள வேண்டும்.

இனி தமிழ்ச் சமூகம் அவ்வாறு நடந்துக் கொள்ளாது, தமிழ்ச் சமூகம் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள் நெறியில் சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் என்ற நம்பிக்கையை இன்றைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழ்ச் சமூகத்திற்கு உள்ளது.

தோழர் சி. மிருதுளா அவர்களை வன்மத்துடன் விமர்சிப்பது, தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்புவது, உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்குதல் நடத்த தூண்டுவது போன்ற இழி செயல்களை செய்துவருபவர்கள் அத்தகையச் செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தோழர் சி. மிருதுளா அவர்கள் மீதான வன்மம் நியாயமற்றது, பயனற்றது. வன்மத்தைத் தவிர்த்து, பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை இனி அரசு தனது முழுச் செலவில் நடத்தப் போவதில்லை, ஒட்டுமொத்த கல்வியும் இனி வணிகச் சந்தையின் பிடிக்குள் செல்லும் பெரும் அபாயம் உள்ள சூழலை அனைவரும் உணர வேண்டும்.‌

இட ஒதுக்கீடு பிரிவினர் இதுநாள் வரை பெற்றிருந்த‌ உரிமை இனி கிடைக்கப் போவதில்லை என்ற நிலையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், பட்டியல் மற்றும் பழங்குடியினர் மீண்டும் கல்வி மறுப்பிற்கு உள்ளாக இருக்கும் அபாயத்தைத் தடுக்க ஒன்றுபட்ட போராட்டம் நடத்த வேண்டிய தமிழ்ச் சமூகம்,  தொழிலாளர் வர்க்கமாக அணிதிரள வேண்டும். அதற்கான முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்,

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.