தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ மற்றும் நலத்திட்ட முகாம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ மற்றும் நலத்திட்ட முகாம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, “Swachhata Hi Seva” இயக்கத்தின் கீழ், NAMASTE (National Action for Mechanized Sanitation Ecosystem) திட்டத்தின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள் மருத்துவ முகாம் 5 மண்டலங்களிலும் நடைபெற்றது.
இதில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக மாநகராட்சி 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திரல் மருத்துவர்கள் தலைமையிலான குழு தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி மருந்து மாத்திரைகளும் வழங்கினர்கள். அரசு நலத்திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கமளித்தனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.