தமிழ் சினிமாவை காப்பாற்றும் முதல்வர் விஜய் மகன் !
தமிழ் சினிமாவில் திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையிலான வர்த்தக நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில், புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் OTT வெளியீட்டுக்கு குறைந்தபட்சம் 8 வார இடைவெளி இருக்க வேண்டும்; OTT, Satellite, Audio, Overseas மற்றும் தமிழ்நாடு திரையரங்கு வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து வருவாய் பிரிவுகளிலும் கணக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விசயங்களை சுட்டிக்காட்டும் அவர், நடிகர் விஜயின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள‘சிக்மா’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டில் தொடங்கும் இந்த நடைமுறை, தமிழ் சினிமாவின் வர்த்தக நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் முதல் முயற்சியாக இருக்கும் என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.