அங்குசம் பார்வையில் ‘பத்தா’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: முராத் கெதானி, பிரியா அட்லீ, டைரக்டர்: பாலாஜி தரணீதரன், ஆர்டிஸ்ட்: விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் பிரித்விராஜ், அர்ஜுன் சிதம்பரம், ஹரிகிருஷ்ணன், சஹஸ்ரா, சாண்டி பாலச்சந்தர், தீபா வெங்கட், ஒளிப்பதிவு: எஸ்.கே.செல்வக்குமார், இசை: சாய் அபயங்கர், எடிட்டிங்: ஆர்.கலைவாணன், காஸ்ட்யூம்: ஸ்ருதி மஞ்சரி, பிஆர்ஓ: யுவராஜ்

1986 சென்னையின் ஒருபகுதியில்[எந்தப் பகுதின்னு தெரியல] மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார் பத்தா [விஜய் சேதுபதி]. சாராயக்கடை தகராறு ஒன்றில் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த ஜோதியை [ அர்ஜுன் சிதம்பரம்] நடுரோட்டில் விரட்டி விரட்டி புரட்டியெடுக்கிறார். ஜோதியின் மனைவி இஸ்மத்பானு பத்தாவின் காலில்விழுந்து கதறியும் விடவில்லை . ஊரே பயத்துடன் இந்த சம்பவத்தைப் பார்க்க, கூட்டத்தில் ஒருவனாக நிற்கும் பள்ளி மாணவன் சபரி[ சாய் பிரித்விராஜ்]யும் பத்தாவின் ரெளடித்தனத்தைப் பார்த்து விக்கித்துப் போய் நிற்கிறான். மறுநாள் பள்ளியில் சக மாணவர்கள் சொல்லும் பத்தாவின் வீரதீரப்பராக்கிரமங்களைக் கேட்டு ஆச்சர்யப்படுகிறான். அப்படிப்பட்ட மிகப்பெரிய ரெளடியான பத்தா, அதே சபரியால் ‘லாக் செய்யப்பட்டு, உயிர் பயத்தில் அலறுகிறான். பத்தா மனம் திருந்தினானா? இதான் இந்தப் படத்தின் கதை.

இந்த வார அங்குசம் வார இதழில்…

பத்தாஒரு சிறுவன் எப்படி பத்தாவை லாக் செய்ய முடியும்? லாக் செய்யும் அளவுக்கு என்ன நடந்தது? நம்ம விஜய் சேதுபதிக்கு ரொம்பவே வித்தியாசமான கதைக்களமும் டைரக்டர் பாலாஜி தரணீதரனின் அபாரமான கதை சொல்லும் விதமும் கனகச்சிதமாக அமைந்து ‘பத்தா’வைக் கொண்டாட வைக்கிறது.

வி.சே.எண்ட்ட்ரியாகும் சீனே ஜோதியப் புரட்டியெடுக்கும் மாஸானா ஃபைட்டில் ஆரம்பிக்கிறது. அப்புறம் ஒரு டப்பாங்குத்து பாட்டு, மனைவி கண்ணம்மா [ லிஜோமோல் ஜோஸ்], மகள் தேன்மொழி [ சஹஸ்ரா] ஆகியோர் மீது பாசம், கோபம், சண்டை என ஆரம்பக்காட்சிகள் நகர்கிறது. ரைட்டு இதுவும் ஒரு வழக்கமான ரெளடிக் கதை தான், ரெளடியாக ஹீரோ இருந்தாலும் அவனுக்குள்ளும் நல்ல மனசு இருக்கும், க்ளைமாக்ஸ்ல வழக்கம் போல மனம் திருந்தி கண்ணீர்விட்டுக் கதறப்போறான்னு  தான் நினைச்சோம்.

பத்தாஆனால் அந்த சிறுவன் சாய், தன்னோட பொம்மையை எடுப்பதற்காக பள்ளிக்குச் சென்று, அதை எடுத்த பின், பாத்ரூம் போய்விட்டு கதவைச் சாத்தும் போது உள்ளேயிருந்து  கதவைத் தட்டும் சத்தம் கேட்ட பின் தான் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்குது. உள்ளே இருப்பது மிகப்பரிய ரெளடி பத்தா என்பது தெரிந்ததும் அந்த சிறுவனின் நடுக்கம் அதிகமாகி, அப்படியே ஓடிவிடுகிறான். வீட்டுக்குப் போனபின்பும் மனம் கேட்காமல், பொறை வாங்கிக்கொண்டு மீண்டும் பள்ளிக்கு வந்து அதை நுனிக்கி கதவு இடுக்கு வழியே ஒரு பேப்பரில் வைத்து அனுப்புகிறான். இப்படியே நான்கு நாட்கள் போகிறது. “டேய்…கதவைத் திறங்கடா…” என வி.சே.கதறுவது, என்ன தான் ஆகப்பெரியரெளடியாக இருந்தாலும் கதவை  உடைக்க முடியாமல் கதறுவது, “நாத்தம் தாங்க முடியலடா…” என அழுவது, சபரி தான் தன்னைக் காப்பாற்றினான்  எனத் தெரிந்ததும் அவனிடம் பாசம் காட்டுவது, என்ன நடந்தது என்பதை  அவனே சொன்ன பிறகு, அவனிடம் பேசும் ஸ்டைல், லிஜோமோலிடம் சொல்லிக் கதறுவது  என விஜய் சேதுபதியின் நடிப்புக் கோட்டையில் வெற்றிக் கொடி கம்பீரமாக பறக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இவருக்கு அடுத்து கொடியைப் பறக்கவிட்டிருப்பது சபரியாக நடித்திருக்கும் சிறுவன் சாய் பிரித்விராஜ் தான். வி.சே.உயிர் பிழைத்துவிட்டதாக ஆஸ்பத்திரியில் லிஜோமோல் சொல்லியதும் அவனுக்குள் இருக்கும் நிம்மதியை கண்களில் வெளிக் கொண்டு வந்து லேசாக ஒரு புன்முறுவலை வெளிப்படுத்துவது, அதன் பின் ஒருவித மிரட்சியுடனே வி.சே.வுடன் சுற்றுவது, பொறை கொடுத்த  டீக்கடைக்காரரைப் பார்த்து மிரள்வது,  .வி.சே.விடம் உண்மையைச் சொல்லும் போது உடலை கொஞ்சம் கூட அசைக்காமல் முகபாவனைகளிலேயே திகிலுடன் சொல்வது, என பத்தாவுக்கே டஃப் கொடுத்துவிட்டான் சாய் பிரித்விராஜ்.

பத்தாமற்றபடி லிஜோமோல் ஜோஸ், சஹஸ்ரா, சாய்யின் அப்பாவாக வரும் ஹரிகிருஷ்ணன், அம்மா சாண்டி பாலச்சந்தர், அர்ஜுன் சிதம்பரம், வி.சே.வின் கூடவே இருக்கும் இருவர் என அனைவருமே நிறைவாக நடித்திருக்கிறார்கள். பரவாயில்லை…பேக்ரவுண்ட் ஸ்கோரை கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார் சாய் அபயங்கர்.

ஜெயில் சிறைக்கம்பிகளையே உடைக்கும் ரெளடியால் , சாதாரண பாத்ரூம் கதவை உடைக்க முடியாமல் திண்டாடுவதை  1966-ல் செய்த கதவை 1986-ல் கனெக்ட் பண்ணியிருப்பது டைரக்டர் பாலாஜி தரணீதரனின் டச்.

‘பத்தா’ பக்காவான ஃபேமிலி படம்.

அங்குசம் பார்வையில் ‘பத்தா’ 60/100

—   ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.