‘மக்கள் காவலன்’ முதல் பாடல் ‘இக்னோர்’ ரிலீஸ்!
பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ‘மக்கள் காவலன்’ படத்திலிருந்து ‘இக்னோர்’ (IGNORE’ )எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி, இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது’மக்கள் காவலன்’.
‘இக்னோர் – IGNORE’ பாடலுக்கு ‘தமிழ் ஹிப் ஹாப்பின் தந்தை’ (Godfather of Tamil Hip-Hop) என அழைக்கப்படும் மலேசிய ராப்பர் யோகி பி (Yogi B), நடிகையும் பாடகியுமான அதிதி ஷங்கர், நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளதுடன், பாடலுக்கான இசை ஒருங்கிணைப்பு மற்றும் நிரலாக்கப் பணிகளையும் (Arrangements & Programming) மேற்கொண்டுள்ளார். பாடல் வரிகளை எம். கே. பாலாஜி எழுதியுள்ளார்.
‘மக்கள் காவலன்’ இசை உரிமையை திங்க் மியூசிக் (Think Music) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதையைச் சொல்லும் ‘இக்னோர் – IGNORE’.தொடர்ந்து ஒலிக்கும் அதிரடி ராப் இசையால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வலியால் முடங்கிவிடாமல், அதிலிருந்து மீண்டெழும் மன உறுதியை வெளிப்படுத்தும் ஒரு ராப் பாடலாகும் (Rap-driven anthem). காயங்களுக்கும் உறுதியான தீர்மானத்திற்கும் இடையே ஊசலாடும் இந்தப் பாடலில், தன்னை மனதளவில் காயப்படுத்திய அதே காயங்களிலிருந்தே அவர் வலிமையைப் பெறுகிறார்; அந்த மாற்றத்திற்கு ராப் இசை கூடுதல் வீரியத்தை அளிக்கிறது.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.