அங்குசம் பார்வையில் ‘இந்தியன் -2’ திரை விமர்சனம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘இந்தியன் -2’ – தயாரிப்பு: ’லைகா’ சுபாஸ்கரன். இணைத்தயாரிப்பாளர்: ‘ரெட் ஜெயண்ட்’ எம்.செண்பகமூர்த்தி. டைரக்‌ஷன் : ஷங்கர். ஆர்ட்டிஸ்ட்ஸ்—கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, குல்ஷன் குரோவர், பாபி சிம்ஹா, விவேக், மனோபாலா, ரேணுகா, தம்பி ராமையா, சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர்…பலர்.. ஒளிப்பதிவு : ரவிவர்மன், இசை: அனிருத், வசனம்: ஜெயமோகன், ஷங்கர், கபிலன் வைரமுத்து ஆகிய மூவர் கூட்டணி. பி.ஆர்.ஓ. சதீஷ் [ எய்ம் ]

இந்தியாவில் லஞ்சம், ஊழல், முறைகேடு இதெல்லாம் ஒழிந்து, நாடு திருந்தணும்னா  முதல்ல இந்தியர்கள் ஒவ்வொருவரும் திருந்தணும்  என்பது தான் தைவான் நாட்டில் தலைமைறைவாக இருக்கும் இந்தியன் தாத்தா சேனாபதி, இந்தியர்களுக்கு அனுப்பும் மெசேஜ்.

Frontline hospital Trichy

ஆஹா.. அருமை… அருமையான மெசேஜ்ஜுடன் படம் ஆரம்பிக்குதுன்னு நாம் நிமிர்ந்து உட்கார்ந்தா… அதுக்குப் பிறகு தான் நம்மள குனிய வச்சு குத்துறாரு பாருங்க.. டைரக்டர் ஷங்கர். அந்த குத்து குத்துறாருங்க. இத நாம திட்டாந்தரமாவோ விஷமத்தனமாவோ சொல்லலப்பு,  கரெக்டான பாய்ண்ட் ஆஃப் வியூல தான் சொல்றோம்.

இந்தியன் -2
இந்தியன் -2

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

“இந்தியாவில் இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போறேன். அதனால ஒங்களோட பாஸ்போர்ட்டை கொடுங்க” ன்னு தைவான் நாட்டுப் பெருசு ஒருத்தரின் பாஸ்போர்ட்டில் தான் சென்னை ஏர்போர்ட்டில் வந்திறங்குகிறார் சேனாபதி. முறைகேட்டை ஒழிக்க வர்றதே முறைகேடு, ஃபோர்ஜரி ரூட்ல தானே ஷங்கர் சார். அதே ரூட்ல தான் பொலிவியா நாட்டுக்குப் போய், வங்கிக் கொள்ளையன் குல்ஷன் குமாரை { விஜய் மல்லையா மேக்கப் } போட்டுத் தள்ளுகிறாரா தாத்தா?

சரி விடுங்க, ஷங்கர் ப்ரோ… இதையெல்லாம் கூட நாங்க மறந்துட்டு, படம் பார்க்க ஆரம்பிச்சா…  சுரங்க மாஃபியா ஒருத்தனைப் போட்டுத் தள்ள, குஜராத்துக்குப் போகும் தாத்தா அவனோட தங்க மாளிகைக்குள் போகும் போது, குஜராத்தி மாதிரியே தலையில் பெரிய தலைப்பாகை, நெற்றியில் நீளவகிடு குங்குமம்னு மேக்கப் போட்டுப் போறாராரே? ஏன்? நல்ல வேளை சேனாபதிங்கிற பேரை மங்கத்ராம் ஷர்மா, பியாரிலால் ஜெயின்னு   மாத்தாம விட்டீகளே…

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

க்ளைமாக்சில் பேட்ரியில ஓடும் ஒத்த வீல் வண்டியில் கமலின் சாகசம் மெய்சிலிர்க்க வைக்கத்தான் செய்யுது. ஆனா பாருங்க.. அந்த வண்டியில பீச் ரோட் முழுக்க கமல் ஓடுறாரு, மெயின் சிட்டிக்குள்ள ஓடுறாரு, சந்து பொந்துக்குள்ள புகுந்து ஓடுறாரு. அட இது கூட பரவாயில்லங்க, அந்த ஒத்த வீலுடன் 50-60 அடி உயத்துல இருக்கும்  மெட்ரோ ரயில் ஸ்டேஷனுக்குள்ள குபீர்னு  பாயுறாரு, அப்புறம் மெட்ரோ ரயிலுக்குள்ள விர்ரு..விர்ருன்னு ஓடுறாரு, மெட்ரோ ரயில் டிரைவரை மிரட்டி வண்டிய ரிவர்ஸ்ல எடுக்கச் சொல்லி , வெளிய குதிச்சு தப்பிச்சு ஓடுறாரு…. ஸ்ஸ்ஸ்ஸ்…ஸப்பா.. அந்த சீன் முடியறதுக்குள்ள கண்ணைக் கட்டிக்கிட்டு கிறுகிறுன்னு வந்திருச்சு ஷங்கர் சார்…

இந்தியன் - 2
இந்தியன் – 2

எப்பா தம்பி அனிருத்து… நீயெல்லாம் எப்படிப்பா இந்த இசைய வச்சுக்கிட்டு லீடிங் மியூசிக் டைரக்டரா [?] சினிமாவுல தாக்குப் பிடிச்சுக்கிட்ருக்க? நீ எங்க தாக்குப் பிடிக்கிற, ஒன்னைய தாங்கிப் பிடிக்கிறதுக்குன்னு ஒரு கும்பல் இருக்குற வரைக்கும் கமல் ஒத்த வீல்ல ஓடுன மாதிரி ஒன்னோட பொழப்பு ஓடத்தான் செய்யும்.

ரைட்டு.. எழுதுனது போதும். நாம் க்ளைமாக்ஸ் ரைட்டிங்கிற்கு வருவோம். 28 ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்குல இருந்த லஞ்சம், ஊழலை முதல் பாகத்தில்  நச்சுன்னு போட்டுப் பொளந்து பொளேர்னு அரசியல்வாதிகள் செவிட்ல அறைவிட்டார் ஷங்கர். ஆனா இப்ப ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழல் வளர்ந்து நிற்பதை, இன்றைய இளம் தலைமுறையினர் மனதில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டிய அத்தியாவசியமான  வேலையில்  கமலுக்கும் ஷங்கருக்கும் தோல்வி தான்.

சாரி மிஸ்டர் கமல் & ஷங்கர் & சுபாஸ்கரன். நெக்ஸ்ட் பெஸ்டா இருக்க வாழ்த்துகிறோம்.

-மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.