வாட்ஸ் ஆப்பில் கள்ளத்தொடர்பு – வீடியோவில் சிக்கிய இன்ஸ்பெக்டர் ! – ஷாக் ரிப்போர்ட் !
திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மற்றபட்டதற்கு அவர் மீது வந்த பாலியல் புகாரே காரணம் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்து அறிய காவல் ஆய்வாளர் மீது புகார் அளித்த நபரை அங்குசம் செய்தி தொடர்பு கொண்டது, அவர் குறிப்பிட்டது,
சென்னை பழைய வண்ணாரப் பேட்டை பகுதியை சேர்ந்த அன்சருக்கும், (பெயர் மாற்றப்பட்டுள்ளது) செங்கல்பட்டு மாவட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த தமிமுன்னிஷாவிற்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 18.6. 2012 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமணம் நடந்தது.
மேலும் இருவருக்கும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகனும், மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக எனது மனைவி செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள அவர் அக்கா வீட்டிற்கு சென்றிருக்கிறார். பிறகு அடிக்கடி அவர் அக்கா வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார். அப்படி சென்று வரும்போதெல்லாம் அவருடைய பேச்சிலும், அவருடைய நடத்தையிலும், அவருடைய குடும்ப வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். மேலும் அவர் குடும்ப வாழ்க்கையில் இருந்தும், குடும்பத்தை கவனித்துக் கொள்வதில் இருந்தும் மாறுபட ஆரம்பித்தார்.
இதனால் கடந்த இரண்டு மாதங்களாகவே எனக்கும் எனது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து திடீரென்று அவருடைய விஷயத்தில் மாற்றம் ஏற்பட என்ன காரணம் என்று தேடும் பொழுது அவருடைய தொலைபேசியை எடுத்து ஆராயத் தொடங்கினேன். அப்பொழுது என் மனைவி வாட்ஸ்அப் கால் வழியாக திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனி சேகர் என்பவருடன் தவறான தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர் எனது மனைவியுடன் நிர்வாணமாக பலமுறை வீடியோ காலில் பேசியதும் தெரியவந்தது, இதையடுத்து பிரச்சனையை சுலபமாக முடித்து எனது மனைவியை மாற்றி விடலாம் முயற்சி செய்தேன். ஆனால் அவர் என்னிடம் சரியாக பேசவில்லை, மேலும் அதே சமயம் காவல் ஆய்வாளர் முனிசேகரிடமும் பலமுறை தொலைபேசி வழியாக பேச முயற்சி எடுத்தேன், ஆனால் எதற்கும் அவர் சரியாக பதிலளிக்கவில்லை.
அதே சமயம் அதற்கு பிறகு எனக்கு பத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்து மிரட்டிய வண்ணம் இருந்தது. இதனால் எனக்கும், எனது குடும்பத்திற்கும், எனது குழந்தைகளுக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை அறிந்து இனியும் அமைதியாக இருந்தால் தீர்வு கிடைக்காது என்று எண்ணி தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கும், வடக்கு மண்டல காவல்துறை தலைவருக்கும், காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவருக்கும், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் புகார் மனு அனுப்பினேன். மேலும் எனக்கோ எனக்கு குடும்பத்திற்கும் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கு காவல் ஆய்வாளரும் மற்றும் எனது மனைவியின் மூன்று சகோதரிகளும் அவர்களுடைய கணவர்களுமே காரணம் என்று குறிப்பிட்டு புகார் அனுப்பி உள்ளேன் என்று கூறினார்.
அதேசமயம் அன்சர் குற்றம்சாட்ட கூடிய திருக்கழுக்குன்றம் ஆய்வாளராக இருந்த முனிசேகர், கடந்த மார்ச் மாதம் முதல் செங்கல்பட்டு எஸ்பி அலுவலகத்திற்கும், ஓட்டேரி காவல் நிலையத்திற்கும், அதற்கு அடுத்து ஜூன் மாதம் மீண்டும் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக மாற்றப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் முனிசேகர் வடமாநில கொள்ளையர்களை பிடிக்க சென்ற குழுவில் இடம் பெற்றிருந்த சமயத்தில் கொள்ளையர்களை சுடும் முயற்சியில் காவல்துறையை சேர்ந்த நபரையே சுட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.