பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் தொடரும் வாகன சோதைனைகள்…

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணனூர் பாளையம் பகுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது ஒட்டி பறக்கும் படை அதிகாரி சசிகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் சத்தியவிநாயகம் காவலர்கள் முனிராஜ் லாவண்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டிருந்தனர் அப்போது அப்பகுதியில் வந்த மினி லாரி ஒன்றை தேக்கி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 98,500 ரொக்கம் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை அடுத்து கரூர் மாவட்டம் கருப்பகவுண்டபுதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து 98 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் ரொக்க பணத்தை  துறையூர் தேர்தல் நடத்தும் அலுவலரான மணிமாறனிடம் ஒப்படைத்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதனை தொடா்ந்து திருச்சி மாவட்டம் துறையூரில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில்  கண்ணனூர் பாளையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது காஞ்சிபுரத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற காரில் ஆவணங்கள் ஏதுமின்றி வைத்திருந்த ரூபாய் 98 ஆயிரத்தைக் கைப்பற்றினர் . கைப்பற்றப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரான மணிவண்ணனிடம் துறையூர் வட்டாட்சியர்  சிவக்குமார் ஒப்படைத்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.