மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியில் பயன்பாட்டு அறிவியலில் புதிய வழிகள் குறித்த பல்துறை சர்வதேச மாநாடு !
மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியில் உள்ள கணிதம், இயற்பியல், தாவரவியல், கணினி அறிவியல், உயிரி தொழில்நுட்பவியல் துறைகள் மற்றும் உள் தர உறுதிப் பிரிவு ஆகியவை இணைந்து, பயன்பாட்டு அறிவியலில் புதிய வழிகள் குறித்த பல்துறை சர்வதேச மாநாட்டை மெய்நிகர் முறை மற்றும் நேர் நிகர் முறையில் மிகச்சிறப்பாக நடத்தினர்.
ஆங்கில இணைப் பேராசிரியர் டாக்டர் ஜெஸ்ஸி ரஞ்சிதா ஜெபசெல்வி பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கணிதத்துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியை டாக்டர் நிர்மலா ரெபேக்கா பால் வரவேற்றார் முதல்வர் மற்றும் செயலர் டாக்டர் கிறிஸ்டினா சிங் தொடக்கவுரையாற்றினார். மாநாட்டுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் குமார் தலைமை வகித்தார்.
தனது உரையில், இடைநிலை ஆராய்ச்சி மற்றும் கற்றலின் முக்கியத்துவத்தை வெற்றிக்கான திறவுகோலாக அடிக்கோடிட்டுக் காட்டினார். பேராசிரியர் வேல்முருகன், இயக்குநர்,சென்னை AMET பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு தொடக்க உரையில் மருந்து கண்டுபிடிப்பு ஒரு இடைநிலை ஆராய்ச்சி என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்த மாநாட்டில் கணிதம், இயற்பியல், தாவரவியல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய துறைகளில் 12 முன்னணி கல்வியாளர்கள் மற்றும் புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச பேச்சாளர்கள் உரையாற்றினர்.
சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இயற்பியல் துணைப் பேராசிரியரும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் பிந்து, தாவரவியல் உதவிப் பேராசிரியரும் மாநாட்டு அமைப்புச் செயலாளருமான டாக் மர்ஜோரி அன்னாள் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இந்த மாநாட்டைநடத்தி முடித்தனர்.
– ஷாகுல்