பிரபல பத்திரிகை குழுமம் கொடுக்கும் விருது நிகழ்ச்சிக்கு முதன்மை ஸ்பான்சர் அதானி என்பதால் விருதை மறுத்த கவிஞர் !

0

 

சுகிர்தராணி தமிழ் இலக்கிய சூழலில் வெகுவாக அறியப்படும் கவிஞராக இருக்கிறார். அடிப்படையில் இவர் இரு தமிழ் ஆசிரியர்.

`கைப்பிடித்து என் கவிதை கேள்’, `இரவு மிருகம்’, `அவளை மொழிபெயர்த்தல்’, `தீண்டப்படாத முத்தம்’, `காமத்திப்பூ’, `இப்படிக்கு ஏவாள்’ ஆகிய படைப்புகளை இயற்றியிருக்கிறார்.

தலித் விடுதலை, பெண் விடுதலை உள்ளிட்ட சமூக சீர்திருத்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பாக நடைபெற்று வரும் தேவி விருதுகள் என்ற பெண்களை அங்கீகரிக்கும் விழா மூலமாக சுகிர்தராணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட இருந்தது. இந்த நிலையில்… அவர் தன்னுடைய முகநூலில்… பிரபல பத்திரிகை குழுமம் கொடுக்கும் விருது நிகழ்ச்சிக்கு முதன்மை ஸ்பான்சர் அதானி என்பதால் விருதை மறுத்திருக்கிறார்..

The poet refused the award because Adani was the main sponsor!
The poet refused the award because Adani was the main sponsor!
விருது மறுப்பு அறிவிப்பு –
நண்பர்களுக்கு வணக்கம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பெண் ஆளுமைகளைச் தேர்ந்தெடுத்து ‘Devi Award ‘ வழங்குகிறது. இலக்கியம் மற்றும் தலித் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கி வரும் என் சமூகப் பங்களிப்பிற்காக, ‘ Devi Award’ எனக்கு வழங்கப்படுகிறது. அதற்காக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு என் நன்றி. விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 8 ந்தேதி புதன்கிழமை சென்னை ITC Grand Chola Hotel ல் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு முதன்மை ஸ்பான்சர் அதானி என்பது நேற்றுதான் எனக்குத் தெரிய வந்தது. நான் பேசும் அரசியலுக்கும் கொண்ட கொள்கைக்கும் சிந்தனைக்கும் அதானி நிதி உதவி அளிக்கும் ஓர் அமைப்பிலிருந்தோ நிகழ்ச்சியிலிருந்தோ விருது பெறுவது எனக்கு சிறிதும் உவப்பில்லை. எனவே இந்த தேவி விருது பெறுவதை மறுக்கிறேன்.இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கும் என் விருது மறுப்பை முறைப்படி இன்று மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்து விட்டேன்.
நான் எப்போதும் என் அரசியல் தெளிவு மற்றும் தெரிவிலிருந்து விலகிச் செல்ல மாட்டேன் என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.