‘டூரிஸ்ட் ஃபேமிலி’ க்கு சர்வதேச அங்கீகாரம்!
சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Highest Rated Comedy Films of 2025 தரவரிசைப் பட்டியலில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ Top 10 பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ்ப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
Letterboxd என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளமாகும். பயனர்களின் மதிப்பீடுகள், விமர்சனங்கள் மற்றும் பார்வை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிடும் இந்த தளம், சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்டது.
— ஜெடிஆர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.