அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவோம் ! டாக்டர் கிரஷ்ணசாமி பேட்டி..

திருச்சியில் அடகு நகையை விற்க

மதுரையில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியில் புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு ஜனவரி 7 ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என்பது அப்பட்டடமான மனித உரிமை மீறல் அண்மைக்காலமாக இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளதே இதற்கு காரணம். எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தெரிந்தும், தெரியாமலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுவால் தமிழ்ச் சமூகம் அழிந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. கோவை கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை நாட்டில் உள்ள 4 கோடி பெண்களுக்கும் நடந்த ஒன்றாக தான் பார்க்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் சில நாட்கள் பேசினோம் பிறகு மறந்துவிட்டோம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சமூக நீதி மண் என்றும் பெண்களுக்கு விடுதலை என்றும் பேசும் நிலையில் அவர்களுக்கு தான் அதிகமா கொடுமைகள் நடந்து வருகிறது. சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். ஒரே ஒரு மாதத்தில் SIR பணிகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

BLO அதிகாரிகள் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு எல்லா வீடுகளிலும் செல்ல வேண்டும். அவ்வாறு செல்கிறார்களா? என்பதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. அரசியல் கட்சிகளிடம் SIR படிவங்கள் சென்றுவிடாமல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

https://www.livyashree.com/

பிள்ளையாரை பிடிக்க சென்று குரங்கை பிடிக்கும் கதையாகிவிடும் SIR பூர்த்தி செய்யும் படிவம் மிகவும் எளிமையாக தான் உள்ளது. வாக்காளர்கள் விடுபடும் நிலை இல்லை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முறையாக மக்களிடம் விழிப்புணர்வு வழங்க வேண்டும். SIR விவகாரத்தில் எந்த ஒரு தவறும் நடக்காத வண்ணம் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். SIR விவகாரத்தில் சட்டம்விரோதமாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்ட வேண்டும்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்தனர். நகராட்சி நிர்வாகத்துறையில் லஞ்சம் கொடுத்து பணியை பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கூடாது. இளைஞர்களின் வாழ்க்கையில் மண்ணை போட்டு விட்டால், திறமையானவர்கள் எங்கு செல்வார்கள்? திமுக அரசு நாடகங்கள் நடத்தி பிரயோஜனம் இல்லை. உண்மையை சொல்ல வேண்டும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

Interview with Dr. Krishnasamy..புதிய தமிழகம் கட்சி வளர்ச்சியை கண்டு இலக்கை அடைந்துள்ளதாக? என்ற கேள்விக்கு ….

ஒரு கட்சியின் வளர்ச்சியை சட்டமன்ற உறுப்பினரை மட்டும் வைத்து தீர்மானிக்கக்கூடாது. தமிழக அரசியல் களத்தை 1995 முன், பின் என்று தான் பார்க்க வேண்டும். புதிய தமிழகம் கட்சி தொடங்கிய பின் ஒரு தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவர்கூட மதமாற்றம் செய்யவில்லை. இப்படி தான் வாழ வேண்டும் என்ற தாழ்த்தப்பட்ட மக்களின் மன நிலையை தவிடு பொடியாக்கி போராட்டம் களம் காண வைத்துள்ளோம்.  1995 முன்னர் தென் மாவட்டங்களில் வாக்குபதிவு குறைவாகதான் இருந்தது. நாங்கள் கட்சி தொடங்கிய பிறகு தான் வாக்குபதிவு சதவீதமே அதிகரித்தது உரிமைக்காக போராட முடியுமா முடியாதா? என்ற சூழல் இருந்ததை போராட முடியும் என மாற்றியுள்ளோம்.

SIR கணக்கெடுப்பின் போது வாக்கு விடுபடும் என திமுகவினர் தான் பேசி வருகிறார்கள். SIR பணிகளில் ஏதேனும் தவறு நடந்தால் அதை தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம். தமிழக வாக்காளர்களை விடுபடாமல் பார்த்து கொள்வதற்குவதற்கு திமுகவிற்கும் பங்கு உண்டு …

கூட்டணி நிலைப்பாடு குறித்த கேள்விக்கு …

ஜனவரி 7 ஆம் தேதி பிறகுதான் எங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம் சட்டமன்றத்தில் மட்டும் இல்லை ஆட்சியிலும் பங்கு பெரும் அளவில் தான் எங்கள் கூட்டணி அமையும் அமைச்சரவையில் பங்கு பெற்றால் தான் மக்களின் குறைபாடுகளை நீக்க முடியும் என்பதால் அதற்கு உண்டான அரசியல் களத்தை அமைப்போம் என கூறினார்.

—   ஷாகுல் , படங்கள்:ஆனந்தன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.