அங்குசம் சேனலில் இணைய

பறப்பதற்கு விமானம் இல்லை எதற்காக இந்த விரிவாக்கம் சீமான் பேட்டி…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அரிட்டாபட்டிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதாக சொல்கிறீர்கள் நீட் மற்றும் ஆன்லைனில் ரம்மிக்கு எதிரான தீர்மானம் என்ன ஆனது சீமான் கேள்வி…

மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடைப்பு பொதுமக்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது…

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சின்ன உடைப்பு மக்களின் முதல் மூன்று முக்கிய கோரிக்கைகள் 2013 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட இழப்பீடை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள், பரந்தூர் விமான நிலையத்தை போல இங்கு பிரச்சனை அல்ல அங்கு மக்கள் நிலத்தை கொடுக்கவே எதிர்க்கிறார்கள், ஆனால் இங்குள்ள மக்கள் நாங்கள் நிலத்தை கொடுத்து விடுகிறோம் ஆனால் அதற்கு எங்களுக்கு மீள்குடி அமர்வு செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அதற்கு இடத்தை அவர்களே தேர்வு செய்து கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். 60, 70 ஆண்டுகளாக இங்கு இருப்பவர்களை ஒரே நாளில் இடம் மாற்றுவது நார்த்தங்காயிலிருந்து செடியை பறித்து வேறு இடத்தில் நடுவதை போல உள்ளது, சொந்த ஊரிலேயே அகதிகளாக வேறு இடத்திற்கு செல்வதை போல தான்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வருபவர்களுக்கெல்லாம் நிலத்தை வெட்டி தொழிற்சாலை தொடங்க இடம் தரும் அரசுகள் இதை செய்வதில் என்ன சிரமம். அன்றைய தேதிக்கு குறைந்த அளவுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. பரமபட்டி போல முத்துர கிராமங்களில் நிலத்தை எடுத்து மாற்றி வீடு கட்டி கொடுத்தது போல எங்களுக்கும் என்றும் சொல்கிறார்கள்.

சமுதாய ரீதியாகவும் மக்கள் குற்றச்சாட்டு வைப்பது குறித்த கேள்விக்கு …

அதுவும் எதார்த்தம் தானே குறளற்ற வலிமை இல்லாதவனை நசுக்குவதுதான் இவர்களின் வழக்கம். சான்றாக சொல்ல வேண்டும் என்றால் தூத்துக்குடி, சென்னை, கடலூரில் மட்டும் ஏன் நச்சு ஆலைகளுக்கு இடம் எடுக்கப்படுகிறது. பல்லாயிரம் ஏக்கர் நிலைமைக்கு விவசாயம் செய்யும் முதலாளிகளின் நிலத்தை தொடுவதில்லை ஏன்.

திண்டுக்கல்லில் சூரிய ஒளி திட்டத்திற்கு பட்டா நிலங்களை கூட கையபடுத்தினார்கள். அவர்களெல்லாம் கூண்டுக்குள் இருக்கும் சேவலாக இருக்கிறார்கள். கூரை மேலிருந்து கூவுவதற்கு அவர்களுக்கு சேவல் இல்லை. ஆனால் இதற்காகவே எங்கள் அப்பாவும், அம்மாவும் இல்லை நேந்து விட்டிருக்கிறார்கள். நான் என்ன ஆனாலும் நிற்பேன். என்னை தாண்டி தான் அவர்களை தொட முடியும். அவர்கள் மாளிகை கட்டி கொடுக்க சொல்லவில்லை கொடுத்த இடத்திற்கு பதிலாக மூன்று சென்ட் இடத்தில் வீடு கேட்கிறார்கள்.

ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்தால் நாடு வளர்ந்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பறப்பதற்கு விமானம் இல்லை. காலை 11 மணிக்கு கிளம்பி தற்போது நாலு மணிக்கு வந்துள்ளேன். பறப்பதற்கு விமானம் இல்லை இந்த விரிவாக்கம் எதற்காக. மற்ற இனங்களுக்கும் எப்போதாவது போராட்டம் வாழ்க்கையில் இருக்கும் ஆனால் எங்களுக்கு வாழ்க்கையை போராட்டமாக மாறிவிட்டது என்று எங்கள் தலைவர் போராட்டத்தின் போது சொன்னார். இந்த மக்களின் வாக்கு தான் இங்கு வெற்றியை தீர்மானிக்கும் என்றால் உங்களால் எங்களை இங்கு பெயர்த்து எரிய முடியாது தானே

மத்திய அரசு மாநில அரசு முழுமையாக எதிர்க்கிறதா என்ற கேள்விக்கு …

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

நாடகம், இந்த நாடகத்தை எனக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்து நான் பார்த்து வருகிறேன். அரிட்டாபட்டிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதாக சொல்கிறீர்கள் நீட் மற்றும் ஆன்லைனில் ரம்மிக்கு எதிரான தீர்மானம் என்ன ஆனது பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருக்கிறார்கள் அங்கு அவர்கள் போராடி திட்டத்தை கைவிட சொன்னால் நாங்கள் இங்கு போராட்டத்தை கைவிடுகிறோம்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கு அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடைபெற்றது அதன் நிலை என்ன. கொடநாட்டில் நடந்த கொலையில் கொன்னவன் யார். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் என்ன குரல் கொடுத்தீர்கள்.

சீமான் பேட்டி...
சீமான் பேட்டி…

தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு என்ன செய்துள்ளீர்கள். நீங்கள் எதிர் கட்சியாக இருந்த போது பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள் நீங்களும் ஆதரவு கொடுத்தீர்கள் அண்ணன் தற்போது உங்கள் ஆட்சியில் அந்த போராட்டத்திற்கு அனுமதியே கொடுக்கவில்லை.

மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளையை எட்டு பேர் பாலியல் வன்புணர்வு செய்ததை மறைக்கப் பார்க்கிறீர்கள். மனநிலை பாதிக்கப்பட்ட பிள்ளையுடன் ஒருவன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்றால் அவனது மனநிலை என்னவாக இருக்கும், போதையில் இருந்துள்ளான் அதை விற்றவன் யார்?

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் குறித்த கேள்விக்கு …

இந்தியா ஒரே நாடா என்று கேட்டாலே அவர்களிடம் பதில் இல்லை. தமிழகத்தில் மட்டும் அனைத்து தொகுதிக்கும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வேறு வட மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்திலாவது ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றதா. ஏனென்றால் உங்களால் நடத்த முடியவில்லை. நாங்களும் விடுதலை சிறுத்தைகளும் அங்கீகாரம் பெற்ற கட்சி நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இவ்வளவு நாள் ஆகியும் எங்களுக்கு இன்னும் அந்த அங்கீகாரம் கடிதமே வரவில்லை. கேட்டால் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல் என்பதால் நேரமில்லை என்கிறார்கள்.

இரண்டு மாநில தேர்தலுக்கு அவ்வளவு வேலை உள்ளது என்று சொல்கிறீர்கள். ஒருவேளை நித்திஷ் குமாரும் சந்திரபாபு நாயுடு வெளியேறி ஆட்சி கலைந்தால் மீண்டும் நாடெங்கும் சட்டமன்றம் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் வைப்பீர்களா. வேலையில்லாத தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதையை போல் உள்ளது. இதனால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை வெட்டி வேலை என கூறினார்.

 

— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.