Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நமது திருச்சி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் ஓலைச் சுவடியியல் ஆய்வாளர், பண்பாடு மற்றும் நாட்டுப் புறவியல் எழுத்தாளர், தமிழியற்துறை முனைவர் கனிமொழி செல்லத்துரை அவர்கள்.
நல்ல தமிழாற்றலோடு, கணினி, இந்தி பேசவும் எழுதவும் கூடிய திறன் வாய்ந்தவர். அரசுப் பள்ளி ஆசிரியர்.
இவரது முதல் ஆய்வு நூல் ‘இராவுத்தர் வரலாறும் வழிபாடும்’ (2021) இரண்டாவது நூல், ‘மன்மதன் கதைப்பாடல் சுவடிப் பதிப்பும் ஆய்வும்’ (2022) இதுபோக நிறைய பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்று கட்டுரைகள் அச்சேறியதோடு, தேசிய ஆய்விதழ்களிலும் இவரது கட்டுரைகள் இடம் பெற்றுத் தனித்த தடம் பதித்து வருகிறார்.
தமது ஆய்வுகளுக்காக வானமாமலை விருது உள்ளிட்ட நிறைய விருதுகள் பெற்றதோடு, தேவராட்டம் போன்ற நிகழ்த்து கலைஞராகவும், அதற்கான பயிற்சியாளராகவும் திகழ்கிறார்.
தமிழியற் ஆய்வு, சுவடியியல் வித்தகர், கணினி, இந்தி, நிகழ்த்து கலைஞர், பறை, சிலம்பம் எனப் பல் திறன் ஆற்றல் கொண்ட முனைவர் கனிமொழி செல்லத்துரை அவர்களை மென் மேலும் திறன் பெருக்கி வளர்ந்து சிறந்தோங்கிட நாமெல்லோரும் வாழ்த்துவோம்.
-பாட்டாளி