மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம் சுவாமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம் சுவாமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம் சுவாமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராயப்பேட்டை மகளிர் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

சென்னை கோபாலபுரத்தில் வசித்துவரும் காயத்ரி சாய் என்கிற பெண்மணி, முதலில் முகநூல் லைவ் வீடியோ மூலம் பத்திரிகையாளர் பிரகாஷ் எம். சுவாமி மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். 2018 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், “எனது கணவரின் மறைவுக்குப் பிறகு, எனது மகனுக்கு பாஸ்போர்ட் வாங்கித் தருவதில் உதவிகரமாக இருப்பதாகக் கூறி பிரகாஷ் எம். சுவாமி என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்” என்று கூறியிருந்ததோடு அதுகுறித்து காவல்துறையில் புகாரும் கொடுத்திருந்தார்.

2019 மே 27 தேதியிட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, ஜூலை மாதம் 2018 மாலையில், காயத்ரியின் மகனுக்கு பாஸ்போர்ட் தொடர்பாக உதவுவதாகக் கூறிக்கொண்டு அவரது வீட்டிற்கு பிரகாஷ் எம். சுவாமி சென்றதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம் சுவாமி
மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம் சுவாமி

இதுபற்றி காயத்ரி கூறுகையில்,

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“அவர் என் அருகில் அமர்ந்து ( பிரகாஷ் எம்.சுவாமி நடந்துகொண்ட விதம் குறித்து காய்த்ரி சாய் எஃப்.ஐ.ஆரில் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தது மிகவும் பாலியல் வன்முறையாக இருந்ததது) என் தோள்மீது கையை போட்டுக் கொண்டு தவறாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். நான், பயத்தில் அலறித்துடித்ததும் வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து என்னை அவரது பிடியிலிருந்து காப்பாற்றினார்கள். நான், அவரை என் தந்தை ஸ்தானத்தில்தான் பார்த்தேன்” என்றார்

பிராகாஷ் எம். சுவாமி பல ஆண்டுகளாக இதுபோல் பல பெண்களிடம் தவறாக நடந்து வந்துள்ளார். அவர்கள், இதை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காக மிகப்பெரிய தலைவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி மிரட்டி இருக்கிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார் காயத்ரி.

 

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

2019 ஆம் ஆண்டு பிரகாஷ் எம் சுவாமி மீது இராயப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகும் தொலைபேசி மற்றும் இணையதளம் வாயிலாக தரக்குறைவான குறுஞ்செய்திகளை அனுப்பிய பிரகாஷ் எம். சுவாமி தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என்றும் தன் மீது பொய்யான வழக்குகள் போட்டு தன்னை பற்றி அவதூறான வதந்திகளை பரப்பி வந்ததாகவும் காயத்ரி சாய் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் பிரகாஷ் எம் சாமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி பிரகாஷ் எம் சாமியின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இதையடுத்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் ராயப்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் பிரகாஷ் எம் சுவாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354(A) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 படி இறுதி அறிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பிரகாஷ் எம் சுவாமி டிசம்பர் 5ந் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.