IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது – தொடர் 6
மேட்ச் இல்லாத நாட்களில் பைக் ஒட்டுவதில் ஆா்வம் காட்டும் கிாிக்கெட் ப்ளேயர்கள் எல்லா நாட்டிலும் உண்டு, ஆஸ்திரேலியாவின் பாக்கர் அணிக்காக விளையாடச் சென்ற வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து நாட்டு ஆட்டக்கார்களும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்களும் அவரவர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதும், டபுள்ஸ் அடிப்பதும், லீலிங் உள்ளிட்ட சின்னச் சின்ன சர்க்கஸ் காட்டுவதும் இயல்பு.
மாலை நேரத்தில பைக் ஓட்டிக்கொண்டிருந்த இங்கிலாந்து ஆட்டக்காரர் டென்னிஸ் அமிஸின் மூளைக்குள் ஏதோ ஒரு பூச்சி ஓடுவது போல இருந்தது. பைக்கை நிறுத்திவிட்டு, ஹெல்மெட்டை கழட்டினார். மூளையில் பூச்சி ஓடியதற்கான காரணம் அவருக்குப் புரிந்துவிட்டது.
வோர்ல்டு சீரிஸ் கிரிக்கெட்டின் அடுத்த மேட்ச்சில் டென்னிஸ் அமிஸ் பேட்ஸ்மேனாகக் களமிறங்கும் நேரம் வந்தது. கிரவுண்டுக்குள் அவர் வந்தபோது, ஃபீல்டிங்கில் இருந்த எதிரணியின் 11 ப்ளேயர்களும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.ஸ்டேடியத்தில் அங்குமிங்குமாக இருந்த ரசிகர்கள் சைடிலிருந்து சிரிப்பு சத்தம்.
“என்ன இவரு பைக்கை நிறுத்திட்டு அப்படியே பேட்டை கையில் எடுத்துட்டு வந்துட்டாரா?
ஹெல்மெட்டைக் கூட கழட்டலையே?” என்று ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சொல்லி சிரித்தனர். அமிஸின் மைன்ட்வாய்ஸோ, “ஓரமா உட்கார்ந்து ஆட்டத்தைப் பாக்குற நீங்க சிரிக்கலாம்டி டேவிட் ஹூக்ஸ் போல என் தாடை பெயர்ந்துவிட்டால், நான் எப்படி சிரிக்க முடியும்?” என்பதாக இருந்தது.

அன்றைய கிரிக்கெட் உலகின் அதிவேக பவுலர்களையெல்லாம் அள்ளிக் கொண்டு வந்துவிட்டார் பாக்கர், ஸ்லோ பவுலிங், ஸ்பின் பவுலிங் எதுவும் தேவையில்லை. எல்லாமே ஃபாஸ்ட் பவுலிங்தான் என்று, தான் உருவாக்கிய கிரிக்கெட் அணிகளுக்கு அவர் அறிவுறுத்தியதும், கிரிக்கெட் பிட்ச்சாக மாற்றப்பட்டிருந்த ஃபுட்பால் மைதானங்களில் பந்துகள் தாறுமாறாக எகிறியதும் டென்ஸிஸ் அமிஸை, பைக் ஹெல்மெட்டுடன் களமிறங்கச் செய்தது.
கிரிக்கெட் வரலாற்றில் ஹெல்மெட் அணிந்து ஆடிய முதல் பேட்ஸ்மென் என்ற சாதனையைப் படைத்தார் டென்னிஸ் அமிஸ்.
“பாக்குறதுக்குகாமெடியாதான் இருந்திச்சி ஆனா, அமிஸ் ஐடியா சரியானதுதான்” என்று வோர்ல்ட் சீரிஸ் கிரிக்கெட்டில் ஆடிய எல்லா அணிகளின் பேட்ஸ்மேன்களும்’ ஒப்புக்கொள்ளும் நிலைமை உருவானது. கிரிக்கெட் போர்டு அங்கீகரிக்காத பாக்கர் கிரிக்கெட்டில்தான் ஹெல்மெட் அணியும் வழக்கம் அதிகாரப்பூர்வமானது. பைக்ஹெல்மெட் அணிந்து கொண்டு பேட் செய்வதால், பந்தை கவனிப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்ததால்,
கிரிக்கெட் ஆட்டத்திற்கேற்ற ஹெல்மெட்டுகளை ஒவ்வொரு பேட்ஸ்மெனும் தேர்வு செய்தார்கள். வித்தியாசமான ஆட்டங்களை மட்டுமின்றி, வித்தியாசமான ஹெல்மெட்டுகளையும் பாக்கர் டீம் மூலம் பார்க்க முடிந்தது. அதை ஐ.சி.சி.யும் பார்த்தது. தங்களுடைய அதிகாரப்பூர்வப் போட்டிகளிலும் ஹெல்மெட் அணியும் வழக்கத்தை கொண்டு வந்தது. கிரிக்கெட் ஆட்டத்திரிஞ ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டது. இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ளேயா்கள் பெரும்பாலும் ஸ்பின் பிட்ச்களில்தான் அதிகம் பழகியிருந்தனர்.ரஞ்சிடிராபி போன்ற ஆட்டங்கள் ஒரளவு வேகமாகப் பந்து வீசக்கூடிய பவுலா்களை் இருந்தாலும், ஸ்பின் பவுலர்களை நம்பித்தான் இந்திய அணி இருந்து வந்தது. பிஷன்சிங் பேடி, பிரசன்னா, சந்திரசேகர், வெங்கட்ராம என நான்கு ஸ்பின் பவுலர்கள். கா்சன் காவ்ரியும் அவ்வப்போது ஸ்பின் பவுலியி மாறி விடுவார். மொஹிந்தர் அமர்நாத் பந்துகள் மெதுவேகத்தில் இருக்கும்.

ஒரு டென்னிஸ் லில்லி, ஒரு மார்ஷல், ஒரு ஜெஃப் தாம்சன், ஒருடும் போத்தம், ஒரு ஆன்டி ராபர்ட்ஸ்ே எப்போது கிடைப்பார்? இந்தியாள் பந்து வீச்சுக்கு மிரண்டு, மற்ற நாட்டு பேட்ஸ்மென் ஹெல்மெட் அணிவது எப்யோ என்பதுரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் ஏக்கமாய் இருந்தது.
சி.எஸ்.கே.ரசிகர்களின் ஏக்கத்தைத்தீர்க்கரேர் இருப்பது போல, அன்றைய இந்திய கிரிக் ரசிகர்களின் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பை கபிப்பதற்கு வாராது வந்த மாமணியாய் வந்தவர்தா கபில்தேவ், அவர் பந்து வீச வந்தால் ஹெ இல்லாமல் எதிர்கொள்ள முடியாது என்ற நினை உருவானது.
முதன்முதலில் சுபில்தேவ் களமிறங்கி பாகிஸ்தான் டீமுக்கு எதிராக. இந்திய ரசிகர்களு கேட்கவா வேண்டும்? பாகிஸ்தான் மண்ணி ஃபைசலாபாத்தில் நடந்த தனது முதல் டெஸ்ட்ட அணிக்கான முதல் ஓவரை கபில்தேவ்தான்ஸிலா தொப்பி அணிந்து கொண்டு கபிலின் முதல் எதிர்கொண்ட பாகிஸ்தான் ஓப்பனர், முடிவதற்குள் ஹெல்மெட் அணியும் அளவு கபிலின் பந்துவீச்சு வேகம் இருந்தது. இந்தியா கிரிக்கெட்உலகம் மிரட்சியுடன் பார்க்கஆரம்பித்து கெர்ரி பாக்கரின் கவனமும் திரும்பியது.
(ஆட்டம் தொடரும்)
கோவி.லெனின் மூத்த பத்திரிகையாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.