அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரிசி பருப்புக்கே வழியில்லையாம்.. அங்கவஸ்திரம் ஒண்ணுதான் குறைச்சலாம்… – IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது 16

திருச்சியில் அடகு நகையை விற்க

வாட் ஊரு மேன் இது? வரி கொடுன்னு கேட்டா, நான் மத்தவங்க கிட்டேயும் வசூல் பண்ணித்தரேன் துரைன்னு நாலு பேரு வரானுங்க. நமக்கு இங்கிலீஷ் பேசத் தெரிஞ்ச ஆளுங்க வேணும்னு கேட்டா, நாங்க ரொம்ப சீக்கிரமா கத்துக்கிட்டு, எங்ககூட இருக்கிற மத்தவங்களுக்கும் கத்துக் கொடுப்போம் துரைன்னு னு நாலு ஆளுங்க வரானுங்க. கிரிக்கெட் விளையாட வந்தாலும், நாங்களும் சேர்ந்துக்குறோம்னு நாலு பேரு வந்து நிக்கிறாங்க’

“ஆமா கேப்டன்.. இந்த மண்ணுல இருக்கிறனங்க ஒருத்தொருக்கருத்தரு சண்டை போட்டுக்கிட்டாலும் ஒவ்வொருத்தர்கிட்டேயும் நல்ல திறமை இருக்கு புதுசா எதையாவது பார்த்தா முதலில் மிரண்டாலும், அப்புறம் அது என்னன்னு பழகிட்டு, சுத்துக்கொடுத்தவங்களையே மிஞ்சிடுற ஆட்கள் அரண்மனையில் மட்டுமில்ல.. கிராமப்புறத்திலும் இருக்காங்க கேப்டன்”

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

“கிரிக்கெட்டை எப்படி கத்துக்குறாங்கன்னு பார்ப்போம். நம்ம டீமுக்கு எத்தனை பேர் தேவைப்படுதோ அதுக்கேத்த மாதிரி ஆட்களை ரெடி பண்ணி, ட்ரெய்ன் பண்ணுங்க”

கிழக்கிந்திய கம்பெனியுடன் இந்தியர்களின் கிரிக்கெட் கம்பெனி என்பது இப்படித்தான் தொடங்கியது. மாலுமி டீம் விளையாடினால் உள்ளூர் வியாபாரிகளும் சேர்ந்து ஆடுவார்கள். சுவர்னரின் ஆட்கள் விளையாடினால், அரண்மனை திவான் போன்ற செல்வாக்குள்ளவர்கள் சேர்ந்து ஆடுவார்கள். ஒவ்வொரு டீமுக்கும் ஒரு கிரேடு இருந்தது. அதற்கேற்ப மைதானங்களும் பயிற்சிகளும் அமைந்தன.

Admission Enquiry Form

“எங்கடியம்மா உன் வீட்டுக்காரர் இன்னும் வரலையா? கோவிலுக்குப் போகணும்னு சொல்லிக்கிட்டிருந்தியே?” “ஆமா.. வாசலைப் உட்கார்ந்திருக்கேன். அவரு துரை கூட என்னவோ கிரிக்கெட்டாம். அதை ஆடுறாராம்.”

“துரைகூட சகவாசம்னா நல்லதுதானே, அடுத்ததா உங்க வீட்டுக்காரரும் கவர்னர் மாளிகையில ஒசந்த இடத்துல உட்கார்ந்திடுவாரு.”

ம்.. அரிசி பருப்புக்கே வழியில்லையாம்.. அங்கவஸ்திரம் ஒண்ணுதான் குறைச்சலாம்”

ஐபிஎல் கிாிக்கெட்வெள்ளைக்காரர்களோடு இந்தியர்கள் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், பார்சி இளத்தவர்கள் மற்றவர்களைவிட வேகமாகக் கற்றுக்கொண்டு சொந்தமாக விளையா ஆரம்பித்தார்கள். இந்தியர்களுக்கான முதல் கிரிக்கெட் கிளப் என்பது பார்சிகள் கிரிக்கெட் ஆடிய கிளப்தான். அதைத் தெடர்ந்து பாம்பே, பெட்ராஸ், கல்கத்தா மூன்று துறைமுக நகரங்களிலும் பிரிட்டிஷாருக்கு சரிசமமாகக் கிரிக்கெட் விளையாடும் வகையில் இந்தியர்கள் தயாராகியிருந்தவர். பாம்பே மாகாணத்தில் பல கிரிக்கெட் அணிகள் உருவாகி, அவற்றுக்குள்ளேயே போட்டிகள் நடந்து கொண்டிருந்தபோது, ஐரோப்பிய அணிகளை எதிர்த்து பார்சி அணி அசத்தலாக ஆடியது. மெட்ராஸ் டீமுடன் கல்கத்தா டீம் மோதியது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சமஸ்தானங்களில் இருந்த ராஜாக்கள் கிரிக்கெட்டை கவனித்தார்கள். வெள்ளைக்காரர்களோடு நல்லுறவாக இருப்பதற்கு கிரிக்கெட் ஒரு தூதுப் புறா என்பதைப் புரிந்துகொண்டார். வான் பிடிக்கத் தேவையில்லாத இனவரசர்களின் கைகளில் கிரிக்கெட் பேட்டைக் கொடுத்தார்கள். வெள்ளைக்கார ட்ரெய்னர்களிடமே பேட் தயாரிக்க சொல்லி, பயிற்சியும் கொடுக்கச் செய்தார்கள். இந்தியாவில் அதிகாரம், பலம், சாதி இவற்றில் யார் யார் உயர்ந்தவர்களாக இருந்தார்களோ அவர்களில் பலர் வெள்ளைக்காரர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

ஆஸ்திரேலியாவுடன் ஆஷஸ் கோப்பை/ கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆடிய இங்கிலாந்து ஆட்டக்காரர் ஜார்ஜ் வெர்னன் தலைமையில் ஒரு ஜூனியர் டீம் இந்தியாவுக்கு வந்தது. அவருடன் வந்தவர்கள், இந்தியாவில் நன்றாக ஆடினாள், இங்கிலாந்து அணிக்கு செலக்ட் ஆகலாம் என்ற நிலை இருந்தது. பாம்பேயில் இருந்த டீம்களுடன் ஆட வைத்தார் வெர்னன்.

கோவி.லெனின்
கோவி.லெனின்

“பலே..”என்று ரசிகர்கள் சொல்லக்கூடிய அளவுக்கு இங்கிலாந்து டீமை இந்திய டீம் எதிர்கொண்டது. கெட்டிக்காரர்களாக ஆடுகிறார்கள் என்று இந்திய ஆட்டக்காரர்களைப் பற்றி இங்கிலாந்து வீரர்களும் பேசிக்கொண்டார்கள். 1892-93ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமான முதல்தரக் கிரிக்கெட் போட்டிகள் நடந்தன.

ஐரோப்பியர்களுக்கும் பார்சிகளுக்குமான கிரிக்கெட் போட்டி என அறிவிக்கப்பட்டு, முதல் மேட்ச் பம்யாயில் நடந்தது. ஐரோப்பிய அணியால் ஜெயிக்க முடியவில்லை. ஆட்டம் டிரா ஆனது. அடுத்த மேட்ச், பூனாவில் நடந்தது. இந்த முறை, ஐரோப்பிய அணியை பாச்சிகள் டீம் வென்றது. ஒரே ஆரவாரம். சுற்றுக்கொடுத்தவர்களிடமே வித்தையைக் காட்டியிருந்தார்கள் இந்தியர்கள்.

வெள்ளைக்கார்கள் விரக்தியும் வியப்புமாக பேசிக் கொண்டிருந்தார்கள். “டெஸ்ட் மேட்ச் ஆடுன ப்ளேயர்கள் எல்லாம் நம்ம ஐரோப்பிய டீமில் இருந்தாங்களே?” “ஆமா.. ஆனாலும் இந்தியர்கள் பந்தாடிட்டாங்களே!” “பார்சி, இந்து, முஸ்லிம்னு இந்தியர்கள் தனித்தனியா இருந்தாலும் எல்லாருமே கிரிக்கெட்டில் கில்லியா இருக்காங்க.” “இந்திய கிரிக்கெட்டர்களை உலகம் அண்ணாந்து பார்க்குற காலம் வரும்”

(ஆட்டம் தொடரும்)

—  கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.