அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எல்லாத்துக்கும் ரெட்ஜெயண்டை குத்தம் சொல்லாதீங்கய்யா” – பொளந்து கட்டிய போஸ்வெங்கட்!

திருச்சியில் அடகு நகையை விற்க

வெகுவிரைவில் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ள படம் ‘இரவின் விழிகள்’. ‘மகேந்திரா பிலிம் ஃபேக்டரி’ பேனரில் மகேர்திரன் என்பவர் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ளார். இன்னொரு நாயகனாக  படத்தின் டைரக்டர் சிக்கல் ராஜேஷ் நடித்துள்ளார். கன்னடத்தில் ‘பங்காரா’ படத்திற்கு சிறந்த நடிகை விருது பெற்ற நீமா ரே ஹீரோயினாக நடித்துள்ளார். மற்ற கேரக்டர்களில் நிழல்கள் ரவி, அஸ்மிதா, கும்தாஜ்,  மஸ்காரா, சேரன் ராஜ், சிசர் மணோகர், கிளி ராமச்சந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : பாஸ்கர், இசை : ஏ.எம்.அசார், எடிட்டிங் : ஆர்.ராமர் & வெங்கடேஷ், ஸ்டண்ட் : ‘சரவெடி’ சரவணன், நடனம் : எல்.கே.ஆண்டனி, பாடல்கள் : அரவிந்த் அக்ரம், பி.ஆர்.ஓ. : ஏ.ஜான்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

‘இரவின் விழிகள்’-ன் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் செப்டம்பர். 24—ஆம் தேதி இரவு நடந்தது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் & நடிகர் போஸ்வெங்கட், டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், நடிகை கோமல் சர்மா, நமீதாவின் கணவர் வீரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசியவர்கள்…

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மகேந்திரன், “வேறு ஒரு கம்பெனிக்கு கதை சொல்லி, அதில் என்னை ஹீரோவாக நடிக்கச் சொன்னார் டைரக்டர். ஆனால் கதையைக் கேட்டதும் நானே தயாரித்து நடிக்கிறேன் என சொல்லிவிட்டேன். படத்திற்காக என்னைவிட அவர் தான் மிகவும் கஷ்டப்பட்டார். இந்தப் படம் விதையாக விதைக்கப்பட்டு, அதற்கு நான் தண்ணீர் ஊற்றி செடியாக வளர்த்தேன். அதை மரமாக வளர்ந்து, நல்ல கருத்து என்கிற பழத்தைச் சாப்பிடுவதற்கு மீடியா நண்பர்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும்”.

டைரக்டர் சிக்கல் ராஜேஷ், “மன்னர்கள், ஜமீன்கள் காலத்தில் பெண்கள் அடக்குமுறைக்குள்ளானார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இதே நிலை தான். இதை மாற்ற முற்போக்கு சிந்தனையாளர்கள், சில அரசியல் தலைவர்கள் வந்தார்கள். ஆனாலும் பெண்களுக்கு அநீதியும் கொடுமையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கு. இதைத் தான் இந்த இரவின் விழிகள் பேசுகிறது”.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஹீரோயின் நீமா ரே, “மிஸ்டர் பெர்ஃபெக்‌ஷனிஸ்ட்னா அது டைரக்டர் சிக்கல் ராஜேஷ் தான். ஷூட்டிங் ஃபுல்லாக முடிந்த பிறகு கூட சில நாட்கள் என்னை வைத்து ரீஷூட் பண்ணினார்”.

ஆர்.வி.உதயகுமார், “இப்ப உள்ள டைரக்டர்களுக்கு கிரியேட்டிவிட்டே இல்லை. சின்ன படங்கள் தியேட்டர்களுக்கு வருவதில் ரெட்ஜெயண்ட் குறுக்கே நிக்குது. அதே சமயம் சின்னப் படத் தயாரிப்பாளர்கள் படத்தின் பப்ளிசிட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். இதை யாரும் பண்ணுவதேயில்லை. இதான் பெரிய மைனஸ். தியேட்டர்காரர்களும் சில சலுகைகளை அறிவித்தால் சின்னப் படங்களின் தயாரிப்பாளர்கள் பிழைத்துக் கொள்வார்கள்” எனச் பேசியவர், அதன் பின் திமுகவை தாக்கிப் பேசிவிட்டுக் கிளம்பினார்.

இதற்கு அடுத்துப் பேசிய போஸ் வெங்கட், “ஜெயலலிதா ஆட்சியிலேயும் பழனிச்சாமி ஆட்சியிலேயும் சினிமாவில் இருந்தது ரெட்ஜெயண்ட். இப்பவும் அவர்களிடம் தான் பல தயாரிப்பாளர்கள் போய் நிற்கிறார்களே தவிர, அவர்கள் யாரையும் வற்புறுத்துவதில்லை. சின்னப் படங்கள் ரிலீசாகலேன்னா அதுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தான் வழிபண்ணனும். அதைவிட்டுட்டு எல்லாத்துக்கும் ரெட்ஜெயண்ட் மேல குத்தம் சொல்லாதீங்கய்யா. உங்க பட ரிலீசுக்கு நீங்க தான் பொறுப்பு” என பொளந்து கட்டினார் போஸ் வெங்கட்.

சீமானின்  அடிப்பொடி களஞ்சியமும் தன்பங்கிற்கு திமுக மீது பாய்ந்து பிராண்டினார். அடுத்துப் பேசிய பி.ஜே.பி. பேரரசுவும் இதே மாதிரி பாய்ந்தார்.

இளைஞர்களை மோட்டிவேட் பண்ணும்விதமாகப் பேசினா நடிகை கோமல்சர்மா.

 

  —    ஜெடிஆர்   

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.