‘ஃபயர்’ படம் ‘அந்த மாதிரி ‘ படமா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பல்வேறு வெற்றிப் படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே. எஸ். கே. இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 06- ஆம் தேதி இரவு சென்னையில் நடந்தது.

பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான த்ரில்லர் ஆகும்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

இப்படத்தின் இசை டி கே (அறிமுகம்)  சதீஷ் ஜி. பாபு ஒளிப்பதிவு , எஸ் .கே .ஜீவா வசனம், படத் தொகுப்பு சி. எஸ்‌ .பிரேம் குமார்,  பாடல்கள் ‘கே ஜி எஃப்’ புகழ் மதுரகவி நடனம், மானஸ்.

'ஃபயர்' படம்இசை வெளியீட்டு விழாவில் பேசியவர்கள்…..

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

வசனகர்த்தா எஸ் கே ஜீவா

“அநீதி’ படத்திற்கு நான் எழுதிய வசனங்களை பார்த்து பாராட்டிய ஜே .எஸ் .கே .

‘ஃபயர்’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை வழங்கினார். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று அறியப்பட்டவர் இயக்குநராகவும் இப்படத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார். படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்,  படத்தொகுப்பாளர், பாடல் ஆசிரியர், நடன அமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர் இப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் சொல்வதற்கு தைரியம் வேண்டும். அது ஜே .எஸ். கே.யிடம் உள்ளது”.

இயக்குநர் ஆர். வி. உதயகுமார்

“தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக ஆகி இருக்கும் ஜே.எஸ். கே.வுக்கு இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள். ஃபயர் படத்தின் முன்னோட்டம் பெயருக்கேற்றார் போல ஃபயர் ஆக உள்ளது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்”.

நடன இயக்குநர் மானஸ்

“இயக்குநர் ஜே எஸ் கே இப்படத்தில் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். நடிகர்கள் பாலாஜியும் காயத்ரியும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஒரே இரவில் முழுப் பாடலையும் எடுத்து முடித்தோம். ஆதரவளித்த ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி.”

ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி பாபு

“ஒரு ஒளிப்பதிவாளராக இயக்குனரை திருப்திப்படுத்தி உள்ளேன் என்று நினைக்கிறேன். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்.”

படத்தொகுப்பாளர் சி எஸ் பிரேம்குமார்

“குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா  மூலமாகத்தான் ஜே எஸ் கே சார் எனக்கு பழக்கம். எட்டு வருடங்களுக்குப் பின்னரும் என்னை நினைவு வைத்து இப்படத்தில் பணியாற்ற அழைத்தார். ஒரு குழுவாக இணைந்து இப்படத்தை உருவாக்கி உள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள்.”

நடிகை அனு

“இது எனக்கு முதல் படம், முதல் மேடை. எஸ் .கே . ஜீவா சார் மூலம் தான் ஜே .எஸ் .கே . அறிமுகமானார். ஃபயர் இப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தை செய்துள்ளேன், ஆனால் அது படம் முழுக்க வரும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ஜே எஸ் கே சாருக்கு நன்றி.”

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இசையமைப்பாளர் டி.கே.

“எனக்கு வாய்ப்பளித்த ஜே எஸ் கே சாருக்கு நன்றி. வாய்ப்பளித்தார் என்பதை விட நிறைய கற்றுத் தந்தார் என்று சொல்லலாம். படத்தில் நான் இசையமைத்த ஒரு பாடல் ஆரம்பத்திலேயே அவரது மிகவும் பிடித்திருந்தது. இன்னொரு பாடலுக்கு நிறைய மெனக்கெட்டு அவரை திருப்திப்படுத்த வேண்டி இருந்தது. ஃபயர் படத்தில் பணியாற்றியது ஒரு மிகச்சிறந்த அனுபவம்.”

நடிகை சாந்தினி தமிழரசன்

“இப்படத்தில் துர்கா என்ற வேடத்தில் நான் நடித்துள்ளேன். பெண்களுக்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை தாங்கி வரும் படம்தான் ஃபயர்.”

நடிகை காயத்ரி ஷான்

“சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இது எனது முதல் மேடை. அதற்காக ஜே எஸ் கே சாருக்கு நன்றி. முதலில் கதை கேட்கும் போது பயமாக இருந்தது. ஆனால் முழுவதும் கேட்டு முடித்ததும் மிகவும் பிடித்து இப்படத்தை உடனே ஒப்புக் கொண்டேன். பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கும் ஆண்களை ஏமாற்றும் பெண்களுக்கும் இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.”

நடிகை சாக்ஷி அகர்வால்

“இந்த படம் ஒரு துணிச்சலான முயற்சி. இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான கருத்தை இது சொல்கிறது. அதே சமயம் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது.”

நடிகர் பாலாஜி முருகதாஸ்

“இது கிட்டத்தட்ட எனக்கு முதல் படம் மாதிரி தான். களி மண்ணுக்கு மதிப்பில்லை. ஆனால் அதை பானையாகவோ பொம்மையாகவோ செய்தால் அதன் மதிப்பே வேறு. அது போல் என்னை இப்படத்தில் இயக்குநர் ஜே எஸ் கே மற்றும் இதர குழுவினர் செதுக்கி உள்ளார்கள்”.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி

“திட்டமிடலுக்கு  பெயர் பெற்றவர் ஜே எஸ் கே. என் தந்தையாருக்கு பிறகு இன்றைய காலகட்டத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டில் திட்டமிட்டவாறு படமெடுக்க முடியும் என்று ஜே எஸ் கே நிரூபித்துள்ளார். இந்த படத்தை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். படம் கட்டாயம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருதும் இல்லை.”

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நடிகர்-இயக்குநர் பாண்டியராஜன்

‘ஜே எஸ் கே எப்போதும் ஆச்சரியப் படுத்திக்கொண்டே இருப்பார். திரைப்படங்களை விநியோகித்தார், தயாரித்தார். பின்னர் நடிக்க ஆரம்பித்தார், இப்போது இயக்குநராக உருவெடுத்துள்ளார். அவரது இந்த புதிய முயற்சி மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்”.

இயக்குநர் ஜே எஸ் கே

“என் மீது அன்பு கொண்டு இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இப்படம் உருவாக தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்த எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி. பொதுவாக திரைப்பட நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்காது. ஆகையால் எனது உதவி இயக்குநர்களை ஒரு சில வார்த்தைகள் பேச அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன். இந்தப் படத்தை இது வரை பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டி உள்ளனர். இவர் ஃபயர்  அனைவருக்கும் புடிக்கும். வந்திருக்கும் அனைவருக்கும்”. என்றார்.

 

— மதுரை மாறன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.