கட்டி ஏழு வருஷமான கக்கூச கூட திறக்காத அடச்சீ… இப்படியும் ஒரு ஊராட்சியா ?

மக்கள் வழிபாட்டு தலங்களே குப்பைகளுக்கு நடுவில்தான் இருக்கு. ஆவரங்காடு பேருந்து நிலையத்திலேயே குப்பை குவிந்துகிடக்குது. பூப்பந்து மைதானம்னு வெறும் பெயர்பலகைதான் இருக்கு. அத சுத்தி கருவேல மரமா புதர் மாதிரி கிடக்கு. வெறும் ”ஊராட்சி”னு மட்டும் சொல்லகூடாது,

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கட்டி ஏழு வருஷமான கக்கூச கூட திறக்காத அடச்சீ… ஊராட்சி !

திருச்சி மாவட்டத்தில் இப்படியும் ஒரு ஊராட்சியா? என்று நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது, இனாம்குளத்தூர் ஊராட்சி. அட, ஊராட்சி நிர்வாகத்தில் சாதனைகளை செய்து பிரதமர் கைகளால் விருது வாங்கிய ஊராட்சியாக இருக்குமோ என்று அவசரப்பட்டு, ஆச்சர்யபட்டுவிடாதீர்கள். இது, அடச்சீ… ரகம்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

குண்டும் குழியுமான ரோடும், குப்பைகள் குவிந்த ஊராட்சிகளும் இயல்பான ஒன்றுதான். 23 இலட்சம் காசை கொட்டி கட்டிய கழிவறையை கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்காமலேயே கட்டிடம் பாழ்பட்டிருக்கிறது என்பது ஒன்றே போதும் இந்த ஊராட்சியின் ’பெருமை’யை புரிந்துகொள்ள.

கட்டி ஏழு வருஷமாகியும் திறக்கப்படாத கழிவறைகள்.
கட்டி ஏழு வருஷமாகியும் திறக்கப்படாத கழிவறைகள்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் அமைந்திருக்கிறது, இனாம்குளத்தூர் ஊராட்சி. ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளுள் அதிக பரப்பளவையும் அதிக மக்கள் தொகையையும் கொண்டது இவ்வூராட்சி. வெள்ளிவாடி, ஆலம்பட்டி புதூர், சின்னாலம்பட்டி, பெரியாலம்பட்டி, தோப்புப்பட்டி, இராஜகாட்டுப்பட்டி, கீழப்பட்டி, மேலூர், செவக்காட்டுப்பட்டி மற்றும் சமத்துவபுரம் என குக்குராமங்களையும் உள்ளடக்கியது, இனாம்குளத்தூர் ஊராட்சி.

சிறுமழைக்கே சேதமடைந்த தடுப்பணை.
சிறுமழைக்கே சேதமடைந்த தடுப்பணை.

12 வார்டு உறுப்பினர்களையும், 2 ஒன்றிய கவுன்சிலர்களையும் கொண்ட இந்த ஊராட்சிக்கு தற்போது தலைவராக இருப்பவர் வெள்ளையம்மாள். இதே இனாம்குளத்தூர் ஊராட்சியின் செயலராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பழனிச்சாமியின் மனைவிதான் இந்த வெள்ளையம்மாள். மனைவி ஊராட்சி தலைவரானதைத் தொடர்ந்து, பக்கத்து கிராமமான கே.கள்ளிக்குடியின் செயலராக பணியிடமாறுதல் பெற்றார் பழனிச்சாமி. பெயருக்குத்தான் இவர் கே.கள்ளிக்குடியின் செயலர். மற்றபடி, இனாம்குளத்தூர் ஊராட்சியின் நிழல் தலைவர் இவர்தான் என குற்றம் சாட்டுகிறார்கள் இனாம்குளத்தூர் மக்கள்.

”தலைவர் ஊராட்சிக் கூட்டங்களுக்கு மட்டுமே வருவார். மற்றபடி பழனிச்சாமிதான் எல்லாம். மத்திய அரசின் 15-வது நிதிக்குழு மூலம் மக்கள் தொகை அடிப்படையில் வருவாய் ஆண்டொன்றுக்கு 33 இலட்சம். மாநில நிதிக்குழு மூலம் வருவாய் சுமார் 13 இலட்சம். வீட்டுவரி, தண்ணீர் வரி, நூலக வரி, தொழில் வரி என சுமார் 12 இலட்சத்திற்கும் மேல் வசூலாகிறது. இதுதவிர, இனாம் குளத்தூர் ஊராட்சியின் வாரச்சந்தை வரிவசூல் உரிமை பஞ்சாயத்து நிர்வாகத்துக்கே உரியது என்ற நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, விதிகளுக்கு புறம்பாக தனிப்பட்ட முறையில் ஏலம் நடத்தி அதிலும் கொள்ளை நடைபெறுகிறது. இந்த நிதியையெல்லாம் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை?

இனாம்குளத்தூர் ஊராட்சி
இனாம்குளத்தூர் ஊராட்சி

7 ஆண்டுகளுக்கு முன்பாக, பழுதடைந்துவிட்டது என்று கூறி ரேஷன் கடையை இடித்துத்தள்ளினார்கள். அடுத்து காவல் நிலையம் அருகிலிருந்த பள்ளியில் இரண்டு கட்டிடங்களை இடித்தார்கள். அதிலிருந்த பழைய கட்டுமானப் பொருட்களையெல்லாம் காயலான் கடைக்கு போட்டு அவர்களே எடுத்துகொண்டார்கள்.

கடந்த 2011-16 ஆம் ஆண்டு மும்தாஜ்  இனாம் குளத்தூர் ஊராட்சித் தலைவராக இருந்தபோது ஊராட்சி பணிகளை செயலாளர் பழனிச்சாமிதான் செய்து வந்தார். துணையாக தனது அக்கா மகன் மதியழகனை காண்டிராக்டர் ஆக கூடவே வைத்துக்கொண்டார்.

பாழடைந்த சாலைகள்...
பாழடைந்த சாலைகள்…

குறிப்பாக, 2016 – 2019 வரையில் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாத நிலையில், ஊராட்சியின் மொத்த அதிகாரமும் செயலாளரின் கைகளில் இருந்த காலத்தில், தனது அக்கா மகன் மதியழகனை வைத்தே அனைத்து டெண்டர்களையும் எடுத்து கல்லா கட்டினார்கள்.

1988 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதில் சாக்கடை நீர் கலக்கிறது என்பதை கடந்த நான்கு ஆண்டுகளாக சுட்டிக்காட்டியும் இன்றுவரையில் செவிடன் காதில் ஊதிய சங்கைப்போல சீர் செய்ய மறுக்கிறார்கள்.

இனாம்குளத்தூர் – வெள்ளிவாடி சாலை போட்டு பத்தாண்டுகள் ஆயிற்று. இனாம் குளத்தூர் மருத்துவமனை சாலை, சின்ன ஆலம்பட்டி சாலை, பெரிய ஆலம்பட்டி சாலை, தோப்புபட்டி சாலை, வெள்ளிவாடி சாலை என ஊராட்சியின் அனைத்து சாலைகளும் பல்லிளிக்கின்றன.

தூர்வாரியதில் முறைகேடு.
தூர்வாரியதில் முறைகேடு.

சடையன் குட்டை, காதர் மொய்தீன் குட்டை, கோட்டா ராவுத்தர் குளம், காதர் மொய்தீன் குட்டை, ஆலம்பட்டி சின்ன கிணறு குட்டை, உடையார் குட்டை, செம்புடையார் குட்டை, ஹைதர் குட்டை, செவத்தக்கனி குட்டை, செம்புடையார் குட்டை, ராமு உடையார் குட்டை, யூசுப் ராவுத்தர் குட்டை, தெற்கு முகமது மீரா குட்டை, செந்தில் தோட்டம் என குட்டைகளை தூர்வாரியதாக இவர்கள் காட்டும் கணக்கு வழக்குகளில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது.” என நீண்டதொரு புகார்பட்டியலை வாசிக்கிறார், இனாம்குளத்தூரைச் சேர்ந்த அப்துல் வதூத். இவர் 1986 முதல் 2011 வரை இதே ஊராட்சியின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“1996 க்கு முன்பு வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்த நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கான தொகுப்பு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடியிருப்பை பெற்ற பெருமாள் என்பவரின் மகன்தான் இந்த பழனிச்சாமி. உள்ளூரில் ஒன்று, கருமண்டபத்தில் ஒன்று, ஆர்.எம்.எஸ். காலனியில் ஒன்று என மூன்று வீடுகள். கார், பங்களா, கான்வென்ட்டில் படிக்கும் பையன் என இன்றைக்கு இவரது சொத்து மதிப்பு மட்டும் எப்படி பார்த்தாலும் ஆறு கோடி தேறும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

புதுக்குளம் தடுப்பணை – 1 9.50 இலட்சம் மதிப்பீட்டிலும்; தடுப்பணை – 2 11.26 இலட்சத்திலும் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள்கூட முழுமையடையவில்லை, அதற்குள்ளாக சிறு மழைக்கே தடுப்பணைகள் சேதமடைந்துவிட்டது. 2020-இல் 7 இலட்சம் மதிப்பீட்டில் கீழப்பட்டியில் கட்டப்பட்ட குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி, இப்பொழுதே கசிய ஆரம்பித்துவிட்டது.

பெரிய ஆலம்பட்டியில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 23 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பறை; 2020-21 ஆண்டு திட்டத்தின் கீழ் 5.25 இலட்சத்தில் கீழப்பட்டியில் கட்டப்பட்ட கழிப்பறை என கட்டி திறக்கப்படாமலேயே இருக்கிறது. ஆக, கணக்கெழுதி காசு பார்க்கத்தான் கழிப்பறை கட்டினார்களா?

பொன்.வேலுச்சாமி
பொன்.வேலுச்சாமி

இனாம் குளத்தூர் ஊராட்சியை கொஞ்சம் சுத்தி வந்தீங்கன்னா உங்களுக்கே புரியும். நான் சொல்லனும்னு அவசியம் இல்லை. பெரியபள்ளிவாசல் பின்புறம், மாரியம்மன் கோயில் சந்தையருகேனு மக்கள் வழிபாட்டு தலங்களே குப்பைகளுக்கு நடுவில்தான் இருக்கு. ஆவரங்காடு பேருந்து நிலையத்திலேயே குப்பை குவிந்துகிடக்குது. பூப்பந்து மைதானம்னு வெறும் பெயர்பலகைதான் இருக்கு. அத சுத்தி கருவேல மரமா புதர் மாதிரி கிடக்கு. வெறும் ”ஊராட்சி”னு மட்டும் சொல்லகூடாது, ”செயல்படாத ஊழல் ஊராட்சி”னு சேர்த்துதான் சொல்லனும்.” என வெடிக்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொன்.வேலுச்சாமி.

அமைதி பேச்சுவார்த்தை
அமைதி பேச்சுவார்த்தை

இரண்டு வாரங்களுக்கு முன், திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நான்கு பக்க புகார் மனுவை கொடுத்திருக்கிறார்கள். 27-06-2023 அன்று சாலைமறியல் போராட்டத்தையும் நடத்தப்போவதாக முன்னறிவித்திருந்தார்கள். இந்நிலையில், இப்பொதுமக்களின் புகார் தொடர்பாக ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

வட்ட நிர்வாக நடுவர் மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில், மாவட்ட நிர்வாக தரப்பில், ராம்ஜிநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர், மணிகண்டம் ஒன்றியத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மணிகண்டம் மண்டல துணை வட்டாட்சியர், சோமரசம்பேட்டை பகுதி வருவாய் ஆய்வாளர், இனாம்குளத்தூர் நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வீடியோ: பிரபல செல்போன் நிறுவன பிளான் மோசடியும் ! அபராதம் கட்டிய கதையும் !

 

கிராம பொதுமக்கள் தரப்பில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அப்துல் வதூர், மார்க்சிஸ்டு கட்சியின் பொன்.வேலுச்சாமி, ஏழுமலை, திமுக வைச் சேர்ந்த ஆசாத், முகம்மது நஜிமுதீன், வெங்கடேசன், வழக்கறிஞர் பழனிச்சாமி, விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சந்திரசேகர், தங்கவேல் மற்றும் முகம்மது ஷரீப், கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி வெள்ளையம்மாள், அவரது கணவரும் கள்ளிக்குடி ஊராட்சி செயலர் பழனிச்சாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

கிராம பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிறைவேற்றித்தருவது; புகார்கள் குறித்து உரிய விசாரணையை மேற்கொள்வது என்ற ஒருமித்த முடிவோடு அமைதிப் பேச்சுவார்த்தை நிறைவடைந்திருக்கிறது.

”ஊழல் முறைகேடு புகார் தொடர்பாக, விசாரிக்கிறோம்னு சொல்லி இருக்காங்க. பார்ப்போம், சரிவரலைனா கிராமத்துல கலந்துபேசி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்.” என்கிறார், அப்துல் வதூத்.

– ஆதிரன்.

இதையும் படிங்க :

* விஸ்வரூபம் எடுக்கும்  நியோமேக்ஸ் நிதிநிறுவன மீதான புகார் !    ஆப்பிள் மில்லட் வீரசக்தி  அலுவலகங்களில் சோதனை ! 

ஐபிஎஸ் அதிகாரியைக் காப்பாற்ற ‘பலிகடா’ ஆக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ!

* ஓட்டுநர் ஷர்மிளாவும் ஓவரா பண்ணும் சோசியல் மீடியாவும் !

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.