ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்கள் !
நாடு முழுவதும் இயங்கிவரும் காவல் நிலையங்கள் அதற்கே உரிய வழிமுறைகளுடன் இயங்கி வருகிறதா? காவல் நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, பொதுமக்களை அணுகும் விதம், வழக்குகளை கையாண்ட விதம் உள்ளிட்டு பல்வேறு அம்சங்களை பரிசீலித்து ஒன்றிய அரசின் குவாலிட்டி கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் நிறுவனம் சான்றளித்து வருகிறது. தமிழகத்தில் இதற்குமுன்னர் சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றிருந்த நிலையில், மதுரையில் 10 காவல் நிலையங்கள் ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ் மற்றும் குவாலிட்டி கவுன்சில் ஆஃப் இந்தியா சான்றிதழ்கள் பெற்றுள்ளன.
மதுரை மாநகரில் 27 காவல் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கீரைத்துறை, விளக்குத்தூண், தெற்கு வாசல், ஜெய்ஹிந்துபுரம், சுப்பிரமணியபுரம், எஸ்எஸ்காலனி, கூடல்புதூர், கே.புதூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய 10 காவல் நிலையங்கள் தற்போது தேர்வாகியிருக்கின்றன.
தரச்சான்றிதழ் பெறும் தகுதியோடு காவல்நிலையங்களை பராமரிக்க உழைத்த போலீஸ் துணைகமிஷனர்கள், போலீஸ் உதவி கமிஷனர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.