ஏலத்திற்கு வரும் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் பட்டியல் யம்மாடி ! … இவ்வளவா ?
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ., வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டு, பெங்களூரு விதான் சவுதா அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஏலம் விடுவதற்கு, கர்நாடகா அரசு வக்கீலை நியமித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில், 1996 டிச., 11ல், கணக்கில் காட்டப்படாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு ஹலசூரைச் சேர்ந்த ஆர்.டி.ஐ., ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆகியோருக்கு 2022 ஜூனில் கடிதம் அனுப்பினார்.
அதில் ஜெ., வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள்; 750 அலங்கரிக்கப்பட்ட செருப்புகள்; 250 சால்வைகள் சேதம் அடையும் தன்மை உடையது. இந்த வழக்கில் 2017ல் தீர்ப்பு வந்தது.
தற்போது, ஜெ., உயிருடன் இல்லை. எனவே, அவற்றை தாமதப்படுத்தாமல் ஏலம் விட வேண்டும். அவரது தீவிர ஆதரவாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளனர். அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கும். தாமதப்படுத்தினால் தேசிய கழிவாக மாறிவிடும்.
எந்த நடவடிக்கையும் இல்லாத சூழலில், பெங்களூரு சிட்டி சிவில் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், ‘சிறப்பு வழக்கறிஞரை நியமித்து, அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கர்நாடக அரசுக்கு ஜனவரி 17ல் உத்தரவிட்டது.
ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்த பொருட்களை ஏலம் விடுவதற்கு, மூத்த வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவளி என்பவரை, மார்ச் 27ம் தேதி அரசு நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்…
விலை உயர்ந்த சேலைகள் புடவைகள் 11,344,
செருப்புகள் 750,
கைக்கடிகாரங்கள் 131,
சுவர் கடிகாரங்கள் 91,
விலை உயர்ந்த பொருட்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட நாற்களிகள் 146,
ஏசி 44,
700 கிலோ வெள்ளிப்பொருட்கள்,
தங்கம், வைரம், ரூபி, முத்துகள் , ரத்தினம் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்கள் 468,
டெலிபோன் இன்டர்காம்கள் 44,
சூட்கேஸ்கள் 33,
காற்றாடிகள்27,
146 டீபாய்கள்,
34 மேசைகள்,
31 கட்டில்கள்,
24 டிரஸிங் மேஜேசைகள்,
9 அலங்கரிக்கப்பட்ட தொங்கும் விளக்குகள்,
81 சோபா செட்டுகள்,
கண்ணாடியுடன் கூடிய 20 டிரஸிங் மேசைகள்,
215 இரும்பு லாக்கர்கள்,
12 டெலிவிஷன்கள்,
10 விசிஆர் செட்டுகள்,
8 வீடியோ கேமிரா,
1 சிடி பிளேயர்,
4 ஆடியோ டெக்,
24 வீடியோ கேசட்,
2 டூ இன்ஓன் டேப் ரிக்கார்டுகள், மொத்தம் 57 வகையான உடமைகள், இதன் மொத்த மதிப்பு 26 வருடங்களுக்கு முன்பு 66 கோடி என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
ஜெ.வின் பொருட்களை அதிமுக சார்பில் ஏலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, அந்த பொருட்கள் அனைத்து அதிமுக அலுவலத்தின் காட்சி பொருட்களாக வைக்க திட்டமிட்டு உள்ளனர். கட்சி நிதியில் உள்ள பணத்தை கொண்டு இந்த ஏலம் எடுக்கலாம் என்று திட்டம் இருப்பதாக அதிமுக வழக்கறிஞர் வேணுகோபால் சொல்கிறார்.