சவ வேடிக்கை திருவிழா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சவ வேடிக்கை திருவிழா

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள கிராம மக்கள் உடல்நலத்துடன் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சவ வேடிக்கை திருவிழா நடத்துவது வழக்கம்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.

சவவேடிக்கை என்றால் ஒரு மனிதன் இறந்தது முதல் செய்யப்படும் சடங்குகளில் தொடங்கி இடுகாடு வரைக்கும் கொண்டு சென்று இறுதி சடங்கு நடத்தும் முறை அனைத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே சவவேடிக்கை வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டிருந்த நபர் இறந்துவிட்ட நிலையில் இடையில் இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்துள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதையடுத்து சேலம் கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி(55).இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

தான் நலம் பெற்றால், உயிருடன் இருக்கும்போதே இறுதிச் சடங்கு செய்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக மனமுருக வேண்டிக் கொண்டுள்ளார். உடல்நலம் குணமடைந்து பூரணநலம் பெற்ற நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக சவவேடிக்கை வேண்டுதல் நிறைவேற்றி வருகிறார். இந்த ஆண்டு ஏழாவது ஆண்டாக சவ வேடிக்கை ஊர்வலத்தில் பிணமாக வேடம் அணிந்து இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றி உள்ளார்.

சவவேடிக்கை வேண்டுதலில் முதலில் ஒரு மனிதன் இறந்தவுடன் செய்யும் சடங்குகளுடன் துவங்குகிறது, பாடை கட்டி,தேர் கட்டி கோவிலில் வழிபாடு நடத்திய உடன் வீதி வீதியாக இறுதி ஊர்வலம் நடத்தப்படுகிறது. பின்னர் இடுகாட்டிற்கு அழைத்துச் சென்று கோழிகளை பலியிட்டு பின்னர் கோழியை புதைத்து விடுவார்கள். இறந்தவராக இறுதி ஊர்வலத்தில்
பங்கேற்கும் ஜெயமணி இடுக்காட்டிலிருந்து வீடு திரும்புகிறார். இதனை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ஊர்வலமாக செல்லும் பொழுது ஊர் மக்கள் இளைஞர்கள் என அனைவரும் நடனமாடி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்கிறார்கள்.

சேலம் மாவட்டம் ஜாரி கொண்டலாம்பட்டியில் உள்ள மாரியம்மன் காளியம்மன் முனியப்பன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று நடந்த நிகழ்வில், ஜெயமணி என்பவரின் வேண்டுதலின் பேரில், உயிரோடு இருக்கும் அவர் இறந்தது போல பாவித்து, சடங்குகள் செய்து பாடையில் வைத்து தேரில் ஊர்வலமாக வீதிவலம் வந்தது, பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

சோழன்தேவ்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.