தமிழ்நாடு அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு –
தமிழ்நாடு அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு –
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்த அமைப்பான ஜாக்டோஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 18.10.2023 புதன் காலை 11.00 மணிக்கு உயர்மட்டக் குழு கூட்டமும் பிற்பகல் 3.00 மணிக்கு திருச்சி ஹோட்டல் அஜந்தாவில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு ப.குமார், இரா.இளங்கோவன், அ.சங்கர் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இதில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் காந்திராஜ் கலந்துகொண்டார்.
ஆசிரியர் – அரசு ஊழியர்- அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் அரசின் வாக்குறுதிகள் சார்ந்த அரசின் இன்றைய நிலைப்பாடு குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகளும் இயக்க அறைகூவல் முடிவுகளும் எடுக்கப்பட்டன.
வரும் 28.10.2023 அன்று மாவட்டங்களில் ஜாக்டோஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை நடத்துவது என்றும் தொடர்ந்து நான்கு கட்ட போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
1) நவம்பர் 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மாலைநேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
2) நவம்பர் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆசிரியர்- அரசு ஊழியர்- அரசுப் பணியாளர் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கம்.
3) நவம்பர் 25 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் .
4) டிசம்பர் 28 ம் தேதி சென்னையில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகை போராட்டம்.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.