அனுமதி இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு ! காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் பொதுமக்கள் பீதி!
உப்பிலியபுரம் அருகே அனுமதி இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு.ஊருக்குள் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் பொதுமக்கள் பீதி.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த
பொங்கலை முன்னிட்டு மாரியம்மன் கோவில் தென்புறம் வாடிவாசல் அமைத்து சவுக்குமர சாரங்கள் அமைத்து, எவ்வித முன் அனுமதியும் பெறாமல் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊருக்கு நடுவில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளாகவே இன்று ( 16.01.2025 ) காலை 9 மணிக்கு காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பெரும் பீதி அடைந்தனர். மாவட்ட நிர்வாகத்திடமோ காவல்துறையிடமோ எவ்வித முன் அனுமதியும் பெறப்படவில்லை என தெரியவருகிறது .
இந்நிலையில் இந்த திடீர் ஜல்லிக்கட்டை அப்பகுதியில் உள்ள திமுக பிரமுகர் முன்னின்று நடத்தியதாக கூறப்படுகிறது. அனுமதி இன்றே நடைபெற்ற ஜல்லிக்கட்டில்சுமார் 25க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் வீதிகளில் ஓடியதால் பொதுமக்களும் குழந்தைகளும் அச்சத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது.
-ஜோஷ்