“சென்னையில் ஜல்லிக்கட்டு” – நடிகர் கார்த்தியின் ஆசை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சென்னையில் கிராமத்து மண் வாசனையை, மாநகர மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டார்.

தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்து தாங்கள் விளைவித்த பொருட்களை விவசாயிகள் இங்குக் கடை விரித்துள்ளனர். இந்த திருவிழாவில் கிராமத்து உணவுகள், சிறு தானிய உணவுகள், மாட்டு வண்டி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஒரு திருவிழாவில் காணக்கிடைக்கும் அனைத்தும் உள்ளது. இத்திருவிழா இந்த சனி, ஞாயிறு  இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இன்றைய ( செப்.28) விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி பேசும் போது

“கோடை விடுமுறைக்கு ஊருக்கு போவது அவ்வளவு பிடிக்கும். ஊரை விட்டு வர மனசே வராது. அந்த மாதிரி கதை என்பதால் தான் மெய்யழகன் படம் செய்தேன். கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு, உழவன் பவுண்டேசன் ஆரம்பித்த பிறகு, சென்னையில் விவசாயிகள்,  விவசாயம் சார்ந்து வேலை செய்பவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதில் முக்கியமானவர்கள் ஹிமாக்கரன், ரேகா,  புரொபசர் இஸ்மாயில் ஆகியோர் . அவர்களோடு  பேசும்போது,  எங்களுக்கு நிறைய அட்வைஸ் தந்தார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சென்னையில் விவசாயம் சார்ந்து என்னென்ன செய்யலான என  பேசும்போது, சென்னையில் திருவிழா நடத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கொரோனாவிற்கு முன்னர் நடந்தது.  நம் குழந்தைகளுக்குக் கிராமத்தைப் பற்றி, நம் உணவுகள் பற்றி, நம் பாரம்பரியம் பற்றி தெரியவில்லை. அதைத் தெரியப்படுத்தும் வகையில், பல மாதங்கள் போராடி இந்த செம்பொழில் திருவிழாவை  மீண்டும் ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள்.

இதற்கு உழவன் பவுண்டேசன் ஒரு சிறு உதவியாக இருந்துள்ளது எனக்குப் பெருமை. இங்கு கிராமத்தில் இருக்கும் எல்லாமும் இருக்கிறது. மாட்டு வண்டியில் ஆரம்பித்து, காளைகள், ஒயிலாட்டம், மயிலாட்டம், நல்ல உணவுகள், தெருக்கூத்து,  எனத் திருவிழாவில் இருக்கும் அனைத்தும் இங்கு இருக்கிறது. இந்த விழா நாளை (செப்.29) வரை  நடக்கிறது. என் குடும்பத்தினரும் வருகிறார்கள். எல்லோரும் வாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்துங்கள்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதையும் செம்பொழில் ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன். இங்கு இந்த திருவிழாவில் பல விவசாயிகள் தங்கள் விளை பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். எல்லோரும் வந்து பார்வையிடுங்கள். இந்தக் கொண்டாட்டத்தில் நீங்களும் இணையுங்கள்”.

பாரம்பரிய கலைகளின் குரு ஐயா காளீஸ்வரன்

“பாரம்பரியக் கலைகளை அரங்கேற்ற மேடை அமைத்துத் தந்த, செம்பொழில் குழுவிற்கும் என் மாணவி ரேகாவுக்கும் நன்றி. பெரிய பெரிய ஆட்கள் இருக்கும் இடத்தில் என் போல எளிய கலைஞர்களைக் கௌரவப்படுத்துவதற்கு நன்றி. இதை மக்களிடம் எடுத்துச் செல்லும் கார்த்திக்கு  நன்றி. 1024 கலைகள் தமிழ் நாட்டில் இருக்கிறது, அதைப் பாதுகாத்து நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம்”.

மண்புழு ஆராய்ச்சியாளர் சுல்தான்

“உழவுக்கு உழவன் பவுண்டேசன் மாதிரி விவசாயத்திற்கு மண்புழு. மண்புழு இருந்தால் அந்த நிலத்தில் ஆரோக்கியம் இருக்கும். இந்த விழாவை மிகச்சிறப்பாக நடத்துகிறார்கள். உழவன் பவுண்டேசன், செம்பொழில் அனைவருக்கும் நன்றி.

முன்பு ஒரு முறை இயற்கை விவசாயம் கற்றுத்தரக் கூட்டம் போட்டோம் 4பேர் மட்டும் தான் வந்தார்கள். இவர்கள் மூலம் விவசாயம் பற்றித் தெரிந்து கொள்ள, இன்று  நிறைய இளைஞர்கள் வருகிறார்கள். மகிழ்ச்சி. இங்குள்ள விவசாயிகளிடம் எதாவது ஒரு பொருள் வாங்குங்கள்”.

 

—  மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.