“சாத்தூர்” வெடி விபத்தில் சேதம் அடைந்த வீடுகளுக்கு நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிந்தபள்ளி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமான திருமுருகன் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட ஆலை நாக்பூர் உரிமம் பெற்று 60க்கும் மேற்பட்ட அறைகளுடன் செயல்பட்டு வருகிறது,
இந்த ஆலையில் சுமார் 200 மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை 6 மணி அளவில் தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ஏற்றி வந்த லோடு வேண் வந்துள்ளது. அதில் மூலப்பொருட்களை இறக்கி வைக்கும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் பட்டாசு சேமிப்பு குடோன் முழுவதும் தரமட்டமாகி வேன்கள் வெடித்து சிதறி அருகில் இருந்த 12க்கும் மேற்பட்ட அறைகளுக்கு பட்டாசு வெடிகள் சிதறி அறை முழுவதும் இடிந்து விழுந்து உள்ளது,வெடி விபத்து அதிர்வில் அருகில் இருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரை இடிந்து விழுந்தும் வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்துள்ளது.
மேலும் இந்த விபத்து மீட்பு பணியில் சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, பகுதியைச் சேர்ந்த 4கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகள் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த சம்பவ இடத்தை ஆய்வு செய்ய வந்த சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார், தாசில்தார், ராமநாதன், சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன், காவல் ஆய்வாளர் கமல் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பட்டாசு விபத்தில் அருகில் சேதம் அடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரி கீழ ஒட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நிவாரணம் வழங்குவதாக கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த பட்டாசு விபத்து கிட்டத்தட்ட 5 மணி நேரமாக வெடி விபத்து நிகழ்ந்துள்ளது, இந்த வெடி விபத்தில் காயமோ உயிர் சேதமோ ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக பலர் உயிர் தப்பினர் என தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பட்டாசு இறக்க வந்த வாகனத்தில் வந்த இரண்டு பணியாளர்களின் நிலை என்னவென்று இப்போது வரை தெரியவில்லை உயிருடன் இருக்கிறார்களா அல்லது விபத்தில் சிக்கி உள்ளார்களா ??
இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் நகர் காவல் துறையினர் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பட்டாசு ஆலை மேலாளர் கீழ ஒட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணனை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருமுருகன் பட்டாசு ஆலை உரிமையாளரான Kv. கந்தசாமி திராவிட முன்னேற்றக் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் பதவியில் வகித்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
— மாரீஸ்வரன்